பசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Mergefrom.svg
இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) மாடு என்ற கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)

பசு பொதுவாக பெண் மாட்டினைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. குளம்புள்ள பெரிய அளவிலான வீட்டு விலங்கு வகையைச் சேர்ந்த இது, போவினே என்னும் துணைக்குடும்பத்தின் முக்கிய உறுப்பினராக கருதப்படுகின்றது. போஸ் என்னும் பேரினத்தின் மிக பரந்த இனமாவதோடு, போஸ் ப்ரைமிஜீனியஸ் என்னும் கூட்டு வகையைச் சேர்ந்ததாகும். பால் ஈன்ற கூடிய பாலூட்டி இனத்தைச் சேர்ந்த கறவை மாடான பசு, சமய ஈடுபாடுடன் தொடர்புடைய விலங்காகவும் போற்றப்படுகிறது.

சில வகைகள்[தொகு]

இந்தியா முழுவதும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாக 26 வகை மாடினங்கள் காணப்படுகின்றன. கறவை மாடுகளில் சில பிரதான வகைகளை பற்றிய குறிப்புகளை பின்வரும் பகுதியில் காணலாம். பசுக்கள் நீண்ட நாட்களுக்கு பால் கொடுக்கும் திறன் உடையவை. திடமான உடலமைப்பும் வலிமையான கால்களும் கொண்டவை. அவற்றில் சில இனங்களை கீழே காணலாம்.

  1. சாஹிவால்
  2. சிந்தி
  3. கிர்
  4. உம்பளச்சேரி
  5. கரன் சுவிஸ்

சிந்தி[தொகு]

இவை சிவப்புச் சிந்தி, சிவப்புக் கராச்சி போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுபவை. கராச்சி மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் பரவலாக காணப்படுபவை. நடுத்தர அளவிலான உருவமும், அடக்கமான உடலமைப்பும் கொண்டவை. இவற்றின் கொம்புகள் தடிப்பாகவும், பக்கவாட்டிலிருந்து முளைத்தும், மழுங்கிய முனைகளுடனும் காணப்படும். இவ்வின காளைகள் பசுக்களை காட்டிலும் அடர்ந்த நிறத்தை கொண்டவை. திமில் கொண்டு காணப்படும் இந்த வகுப்பை சேர்ந்த பசுக்கள், சிறிய அளவிலான காம்புகைளைக் கொண்ட பெரிய மடியுடன் தென்படுபவை. சாந்தமாகவும் அமைதியாகவும் இருப்பவை. உண்ணி போன்ற பூசிக்கடிகளையும் வெப்பத்தையும் தாங்கக்கூடிய ஆற்றல் உடையவை. இந்தியாவிலுள்ள கறவை இனங்களிலேயே சிக்கன செலவில் அதிக பாலை சுரக்கும் வல்லமை கொண்ட மாடுகளாக சிந்தி மாடுகள் கருதப்படுகின்றன. ஒரு கறவை காலத்தில் 5443 கிலோ பாலை கொடுக்கும் திறனுள்ளவை.

கிர்[தொகு]

கத்தியாவாரி, சுர்தி போன்ற பெயர்களாலும் இவை அறியப்படுபவை. தென் கத்தியவாரைச் சார்ந்த கிர் காடுகளில் தோன்றிய இனமாகும். கலப்பு கிர் மாடுகள் பரோடாவிலும் மகாராஷ்டிர மாநிலத்தின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. முழுமையாக ஒரே நிறத்தில் அல்லாமல், சிவப்பு, கருஞ்சிவப்பு, வெண்மை கலந்த சிவப்பு, அல்லது சிவப்பு புள்ளிகளுடனான பாங்கினை உடையவை. தெளிவான கோடுகள் காணப்படும் சிறந்த உடற்கட்டுடன் கம்பீர தோற்றமுடையவை. காதுகள் இலை வடிவிலும், வால் சாட்டை போல நீளமாகவும், கால்கள் நீளமாகவும் உருண்டு திரண்டும் இருக்கும். இவ்வினத்தைச் சேர்ந்த காளை மாடுகள் கனமாகவும், சக்தி வாய்ந்தவையாகவும், அதிக இழுக்கும் திறன் கொண்டும் காணப்படும். கறவை மாடுகள் ஒரு கறவைக் காலத்தில் அதிகபட்சமாக 3715 கிலோ எடை அளவிற்குப் பாலை கொடுக்கிறது.

பசும்பால்[தொகு]

பசு பெரும்பாலும் அது ஈனும் பாலுக்காகவே வீட்டு விலங்காக வளர்க்கப்படுகிறது. பசுவினுடைய பால் பல சத்துக்கள் நிறைந்ததுள்ள காரணத்தினால் மனிதன் அதனை ஒரு முக்கிய உணவாகக் கொண்டுள்ளான். உலகம் முழுதும் 6௦௦ கோடி பேர் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உட்கொள்கின்றனர். சுமார் 1.5 கோடி மக்கள் பால்பண்ணையை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். கடந்த முப்பது ஆண்டுகளில் பால் உற்பத்தி 5௦ விழுக்காடுகள் அதிகரித்துள்ளது. 2௦11 FAOவின் மதிப்பீடின்படி உலகம் முழுவதும் உற்பத்தியாகும் பாலில் 85 சதவீதம் பசுமாடுகளிடமிருந்தே பெறப்படுகிறது.

உலகளவில் அமெரிக்கா பால் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இந்தியா, சீனா, பிரேசில், மற்றும் ரஷ்யா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 197௦ஆம் ஆண்டு முதல் தெற்கு ஆசியா பால் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது. அதே சமயம் ஆப்ரிக்காவின் பால் உற்பத்தி மிகவும் மெதுவான வளர்ச்சியையே பதிவு செய்துள்ளது.

1௦௦ கிராம் பாலில் உள்ள போஷாக்கு விவரம்[தொகு]

கூறுகள் அளவுகள்
தண்ணீர் 87.8 கிராம்
புரதச்சத்து 3.2 கிராம்
கொழுப்பு 3.9 கிராம்
---- பூரிதக் கொழுப்பு அமிலம் 2.4 கிராம்
---- அபூரிதக் கொழுப்பு அமிலம் (Mono) 1.1 கிராம்
--- அபூரிதக் கொழுப்பு அமிலம் (Poly) 0.1 கிராம்
சர்க்கரைச்சத்து 4.8 கிராம்
கொழுப்பினி 14 மில்லிகிராம்
சுண்ணாம்புச்சத்து 120 மில்லிகிராம்
எரிசக்தி 66 கிலோகலோரி

பால் கொழுப்பு சதவீதங்கள்[தொகு]

இனம் தோராய விழுக்காடு
ஜெர்சி 5.2
ஜெபு 4.7
ப்ரௌன் சுவிஸ் 4.0
ஹோல்ச்டீன்-ஃப்ரெஸ்சியன் 3.6

தமிழ் இலக்கியத்தில் பசு[தொகு]

சமய வழிபாடு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பசு&oldid=1733093" இருந்து மீள்விக்கப்பட்டது