மாடு
| மாடு | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||||
|
கொல்லைப்படுத்தப்பட்டவை
|
||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| Bos taurus லின்னேயசு, 1758 |
மாடு (பேச்சு வழக்கில் பசு என அழைக்கப்படும்) பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. பசுவினுடைய பால் பல சத்துக்கள் நிறைந்ததுள்ள காரணத்தினால் மனிதன் அதனை ஒரு முக்கிய உணவாகக் கொண்டுள்ளான். இந்தியக் கலாச்சாரத்தில் பசு போற்றப்படும் ஒரு விலங்காக உள்ளது. புராணங்களின்படி காமதேனுவும், நந்தினியும் தேவலோகப் பசுக்கள்.
தமிழகத்தில் [தொகு]
கோனார் என்போர் தமிழ்நாட்டின் ஒரு முக்கிய சமுதாயம் ஆகும், இவர்கள் பால் மற்றும் பால்பண்ணை சார்ந்த வளர்ச்சியான தொழில்களைச் செய்கின்றனர், குறிப்பாக இவர்கள் முல்லை நில மக்களாக தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
மாடு என்று எல்லோராலும் பொதுவாக அழைக்கப்படும் இந்த விலங்கு இந்தியா மட்டுமல்லாது உலகின் எல்லா நாட்டினருக்கும் முக்கியமான வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய விலங்கு ஆகும்.
இவ்விலங்கின் பால் மனிதனுக்கு மிக உபயோகமான மற்றும் அடிப்படையான திரவ உணவாகும். பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற ஒரு ஊட்டச்சத்து மிகுந்த திரவ உணவாகும்.
இதன் பால் மட்டுமின்றி இதன் பயன் கணக்கிலடங்காதது. ஆண் விலங்கு எருது என அழைக்கப்படுகிறது. நிலத்தில் பயிர் செய்ய ஏதுவாக அதனை உழுதவதற்கு எருதினை பயன்படுத்தி ஏர் உழுகிறார்கள்.
பாரவண்டி இழுக்கவும் இவ்வெருதுகள் பயன்படுகின்றன. மேற்கத்திய நாடுகள் மட்டுமின்றி தற்போது இந்தியாவிலும் இதன் இறைச்சி உண்ணப்படுகிறது. ஆனால் பெண் விலங்காகிய பசுவினை இந்தியர்கள்(குறிப்பாக இந்துக்கள்) உண்பதில்லை.
பசு இந்தியர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்துக்கள் இவ்விலங்கினை தெய்வமாக வழிபடுகின்றனர். இதன் பால் இந்து கடவுளுக்கு அபிஷேகம் செய்யவும் பிரசாதமாகவும் படைக்கப்படுகிறது. பசுவினை இந்துக்கள் காமதேனு என அழைக்கின்றனர்.
படங்களின் தொகுப்பு [தொகு]
-
தாழியில் தண்ணீர் பருகும் பசு