பூஞ்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பூஞ்சை
புதைப்படிவ காலம்: Early டெவோனியக் காலம்–Recent (but see text)
இடது மேலிலிருந்து கடிகாரப் புறத்தில்: அமேனிடா மஸ்காரினா, ஒரு பெசிடியோமைசீட்டு; சர்கோஸ்கைஃபா காக்கினே, ஒரு அஸ்கோமைசீட்டு; பூஞ்சைகளால் சூழப்பட்ட ரொட்டித்துண்டுகள்; கைட்ரீடியோமைகோட்டா துறையைச் சேர்ந்த ஒரு பூஞ்சை; ஒரு அஸ்பெர்ஜில்லஸ் கொனிடிஓஃபோர்.
இடது மேலிலிருந்து கடிகாரப் புறத்தில்:
அமேனிடா மஸ்காரினா, ஒரு பெசிடியோமைசீட்டு;
சர்கோஸ்கைஃபா காக்கினே, ஒரு அஸ்கோமைசீட்டு;
பூஞ்சைகளால் சூழப்பட்ட ரொட்டித்துண்டுகள்;
கைட்ரீடியோமைகோட்டா துறையைச் சேர்ந்த ஒரு பூஞ்சை;
ஒரு அஸ்பெர்ஜில்லஸ் கொனிடிஓஃபோர்.
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி (யூக்கார்யோட்டு)
(தரப்படுத்தப்படாத) ஓபிஸ்தொகோன்டா
திணை:
(இராச்சியம்)
பூஞ்சை
(L., 1753) R.T. Moore, 1980 [1]
துணைப்பேரரசு/பிரிவு(ஃபைலம்)/துணைப்பிரிவு[2]
பிளாஸ்டோகிளாடியோமைகோடா
கைட்ரீடியோமைகோடா
குளோமெரோமைகோடா
மைக்ரோஸ்போரிடியா
நியோகாலிமாஸ்டிகோமைகோடினா

டிகார்யா (inc. டியூட்டிரோமைகோடா)

அஸ்கோமைகோடா
பெசிசோமைகோடினா
சாக்கரோமைகோடினா
டாஃப்ரினோமைகோடினா
பெஸிடியோமைகோடா
அகாரிகோமைகோடினா
புக்சினியோமைகோடினா
உஸ்டிலாகினோமைகோடினா

துணைப்பிரிவு இன்கர்டே செடிஸ்

எண்டோமாப்தோரோமைகோடினா
கிக்செல்லோமைகோடினா
மியூகோரோமைகோடினா
ஜூபேகோமைகோடினா

மிகப் பெரிய மெய்க்கருவுயிரி உயிரினக் குழுக்களில் பூஞ்சைகளும் (Fungi) (இலங்கை வழக்கு:, பூஞ்சணம், பங்கசு) ஒன்று. வளமற்ற மண்ணும், தாவர, விலங்கு கழிவுகளும் இவற்றின் தாக்கத்தால் மாற்றமடைந்து, நிலத்துடன் சேர்வதால் நிலவளம் அதிகரிக்கிறது. தொடக்கத்தில் தாவர இராச்சியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்பட்ட பூஞ்சைகள், பின்னர் தாவரங்கள், விலங்குகள் போலத் தனிப்பெரும் உயிர் இராச்சியமாக வகைப்படுத்தப்பட்டன. பூமியில் எல்லா வகை சுற்றுச்சூழல்களிலும் பூஞ்சைகள் காணப்படுகின்றன. இவை இருண்ட, ஈரப்பசை நிரம்பிய இடங்களிலும் கனிம ஊட்டப்பொருட்கள் நிறைந்த வளர்தளங்களிலும் வளர்கின்றன. பல முக்கியமான ஒட்டுண்ணி வாழ்வை மேற்கொள்ளும் உயிரினங்கள், மற்றும் சிதை மாற்றம் செய்யும் உயிரினங்கள் பூஞ்சை இராச்சியத்தில் உள்ளன. பூஞ்சைகள் பச்சையம் அற்ற மெய்க்கருவுயிரி (யூக்காரியோட்டிக்) உயிரினங்கள். இவை தாவரங்களைப் போலச் சுவருடைய உயிரணுக்களை உடையனவாகக் காணப்பட்டாலும், இவற்றில் பச்சையம் இல்லை. இப்பூஞ்சைகளினால் ஏற்படும் வேதிவினை மாற்றங்கள், சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பூஞ்சைகளைப் பற்றிய அறிவியல் பிரிவு பூஞ்சையியல் (mycology) எனப்படுகிறது.


பூஞ்சைகள் பொதுவாகக் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும். எனினும் காளான்களாக இவை விருத்தியடையும் போது கண்ணுக்குத் தென்படுகின்றன. ஏனைய நுண்ணியிர்கள் போலவே இவற்றிலும் மனிதர்களுக்குப் பயனுடையவை, பயனற்றவை, தீமையானவை என உள்ளன. கன்டிடயாசிஸ் போன்ற நோய்களுக்கு இவை காரணமாகின்றன; உணவைப் பழுதடையச் செய்கின்றன. எனினும் பெனிசிலின் போன்ற முக்கியமான நுண்ணியிர்க்கொல்லிகளை உற்பத்தி செய்யப் பயன்படுகின்றன. பூஞ்சைகள் பல தாவரங்களுடனும், வேறு உற்பத்தியாக்கிகளுடனும் ஒன்றியவாழிகளாக வாழ்கின்றன. இலைக்கன் (அல்கா-பூஞ்சை அல்லது சயனோபக்டீரியா-பூஞ்சை கூட்டணி) இதற்கு மிக முக்கியமான உதாரணமாகும். மரங்களின் வேர்களில் கனியுப்பு அகத்துறிஞ்சலுக்கு இவை ஒன்றியவாழிகளாகச் செயற்பட்டு உதவுகின்றன.

பூஞ்சைகளின் பண்புகள்[தொகு]

பூஞ்சையின் ஹைப்பே கலங்கள்
1- ஹைப்பே சுவர் 2- பிரிக்கும் சுவர் 3- இழைமணி 4- புன்வெற்றிடம் 5- எர்கோஸ்டரோல் பளிங்கு 6- இரைபோசோம் 7- கலக் கரு 8- அகக்கலவுச் சிறுவிழை 9- இலிப்பிட்டு உடல் 10- கல மென்சவ்வு 11- ஸ்பிட்ஸென்கூர்ப்பர் (Spitzenkörper) 12- கொல்கி உபகரணம்

பூஞ்சைகள் உயிரியல் வகைப்பாட்டில் தனி இராச்சியமாகக் கருதப்படுகின்றன. முற்காலத்தில் தாவரங்களுடன் வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போது பூஞ்சைகளின் தனித்துவமான இயல்புகள் கண்டறியப்பட்டுள்ளதால் இவை தனி இராச்சியமான Fungiiக்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பரிணாம வளர்ச்சி[தொகு]

பூஞ்சைகளின் வகைபாடு[தொகு]

யூனிகோன்டா  

அமீபோசோவா


  ஆபிஸ்தகோன்டா  
   
   

அனிமேலியாகொயேனோசோவா

நியூக்ளியரீட்ஸ்
ரோசெல்லிடா


  பூஞ்சை  

மைக்ரோஸ்போரிடியா
கைட்ரீடியோமைகோடாநியோகாலிமாஸ்டிகோமைகோடா
பிளாஸ்டோகிளாடியோமைகோடாஜூபேகோமைகோடினாகிக்செல்லோமைகோடினாஎன்டோமாப்தோரோமைகோடினாமியூகோரோமைகோடினாகுளோமெரோமைகோடா


  டிக்கார்யா  

அஸ்கோமைகோடாபெஸிடியோமைகோடா
சூழலியல்[தொகு]

பூஞ்சைகள் புவியிலுள்ள அனைத்து வகையான சூழல்த்தொகுதிகளிலும் காணப்படுகின்றன. பக்டீரியாக்களும் பூஞ்சைகளுமே உயிரியல்த் தொகுதிகளில் முக்கியமான பிரிகையாக்கிகளாகும். எனவே இவை மீண்டும் சூழலுக்குக் கனியுப்புக்கள் சென்றடைவதை உறுதிப்படுத்துகின்றன. எனவே பூஞ்சைகள் அழிக்கப்பட்டால் புவியில் சூழலின் நிலைப்புத் தன்மை சீர்குலைந்து விடும்.

ஒன்றியவாழ்வு[தொகு]

பூஞ்சைகள் ஆர்க்கியாவைத் தவிர்ந்த மற்றைய அனைத்து இராச்சியங்களைச் சேர்ந்த உயிரினங்களுடனும் ஒன்றியவாழிகளாகச் செயற்படுவதாக அறியப்பட்டுள்ளது. இவ்வாறான நிலமையில் இரு உயிரினங்களும் பயனடையும் வகையில் அவற்றுக்கிடையில் இடைத்தொடர்புகள் காணப்படும்.

தாவரங்களுடன்[தொகு]

தாவரங்களின் வேர்களில் சில வகைப் பூஞ்சைகள் (நோய்த்தொற்று ஏற்படுத்துபவையைத் தவிர்த்து) வளர்ந்து மைகொரிஸா (Mycorrhiza) எனும் கட்டமைப்பை ஏற்படுத்துகின்றன. இவை பொதுவாக பெரும் மரங்களில் காணப்படும். மைகொரிஸா நீர் மற்றும் கனியுப்பு அகத்துறிஞ்சலின் வினைத்திறனை அதிகரிக்கின்றது. இதனால் மைகொரிஸா கட்டமைப்புடைய தாவரம் நன்மையடைகின்றது. பூஞ்சைகள் தாமுள்ள தாவர வேரிலிருந்து தமக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொள்கின்றன. வேர் மயிர்கள் குறைவான தாவரங்களில் மைகொரிஸா மூலமே அனேகமான நீர் மற்றும் கனியுப்புத் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன. முக்கியமாக பொஸ்பேட்டு அகத்துறிஞ்சலுக்கு இக்கட்டமைப்புகள் உதவுவதாக அறியப்பட்டுள்ளது. அறியப்பட்டுள்ள தாவரங்களில் கிட்டத்தட்ட 90% ஆனவை மைகொரிஸா மூலம் பூஞ்சைகளுடன் ஒன்றிய வாழிகளாகச் செயற்படுகின்றன. இத்தொடர்புக்கான ஆதாரங்கள் கடந்த 400 மில்லியன் வருடங்களாக உள்ளன.

தாவர இழையத்துக்குள் வாழும் ஒன்றியவாழி பூஞ்சை

சில பூஞ்சைகள் தாவரங்களின் இலைகள் மற்றும் தண்டினுள் ஒன்றியவாழிகளாக வாழ்கின்றன. இப்பூஞ்சைகள் சுரக்கும் நச்சுப்பதார்த்தங்கள் தாவரவுண்ணிகளிடமிருந்து இப்பூஞ்சைகள் வாழும் தாவரத்துக்குப் பாதுகாப்பளிக்கின்றன. பூஞ்சைகள் தாவரங்களிடமிருந்து உணவு மற்றும் உறையுள்ளைப் பெறுகின்றன. இத்தொடர்பை சில வகை புற்களில் அவதானிக்கலாம்.

அல்கா மற்றும் சயனோபக்டீரியாவுடன்[தொகு]

லைக்கன்

பூஞ்சையானது அல்கா அல்லது சயனோபக்டீரியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளும் ஒன்றியவாழிக் கூட்டணியே லைக்கன் எனப்படும். லைக்கன்கள் ஏனைய உயிரினங்கள் வாழ முடியாத பாறைகளிலும் வாழும் ஆற்றலுள்ளன. இது இவ்வொன்றியவாழிக் கூட்டணியாலேயே சாத்தியமானது. பூஞ்சை அல்காக்கு/சயனோபக்டீரியாக்கு பாதுகாப்பு, நீர் மற்றும் கனியுப்புத் தக்கவைப்பை வழங்குவதுடன் அல்கா/சயனோபக்டீரியா உணவை உற்பத்தி செய்து பூஞ்சைக்குரிய பங்கை வழங்குகின்றது. லைக்கன்கள் புவியில் மண் தோன்றுவதில் முக்கிய பங்களிப்பு செய்துள்ளன. 17500 தொடக்கம் 20000 வரையான பூஞ்சையினங்கள் (20% பூஞ்சைகள்) லைக்கன்களைத் தோற்றுவிக்கின்றன.

பூஞ்சைகளின் பயன்பாடுகள்[தொகு]

பொருளாதார ரீதியிலும் மருத்துவ ரீதியிலும் இவை பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. காளான்களும், பெனிசிலியமும், மதுவமும் எமக்கு நன்றாகப் பழக்கப்பட்ட பூஞ்சைகளாகும். பெனிசிலியம் மருந்து தயாரிப்பிலும், மதுவம் மற்றும் காளான் உணவுற்பத்தியிலும் பயன்படுகின்றன.

மருந்துற்பத்தி[தொகு]

பெனிசிலின் போன்ற நுண்ணியிர்க்கொல்லிகளின் தயாரிப்பில் பூஞ்சைகள் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையாக பெனிசிலியம் பூஞ்சையிலிருந்து பெறப்படும் பெனிசிலின் சிறிதளவான பக்டீரியாக்களையே எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. எனவே இயற்கையாகப் பெறப்படும் பெனிசிலினை மாற்றத்துக்குட்படுத்தி பலம் கூடிய பெனிசிலின் வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. Penicillium griseofulvum எனும் பூஞ்சை இனத்திலிருந்து கிரீசியோஃபல்வின் எனும் நுண்ணியிர்க்கொல்லி உற்பத்தி செய்யப்படுகின்றது. கொலஸ்திரோல் சுரப்பை நிரோதிக்கும் மருந்துகளை உற்பத்தி செய்யவும் பூஞ்சைகள் பயன்படுகின்றன.

உணவுத் தயாரிப்பில்[தொகு]

தனிக்கல பூஞ்சை வகையான மதுவம் பாண் தயாரிப்பிலும், மதுபானத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றது. Saccharomyces எனும் மதுவத்தின் நொதித்தல் தொழிற்பாட்டின் மூலம் மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன.

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Moore RT. (1980). "Taxonomic proposals for the classification of marine yeasts and other yeast-like fungi including the smuts". Botanica Marine 23: 361–373. 
  2. The classification system presented here is based on the 2007 phylogenetic study by Hibbett et al.

வெளி இணைப்புகள்[தொகு]

அருஞ்சொற்பொருள்[தொகு]

  • இராச்சியம் - Kingdom
  • புல்லுருவி - Parasite
  • சிதை மாற்றம் செய்யும் உயிரினங்கள் - Decomposers


உயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பூஞ்சை&oldid=1668044" இருந்து மீள்விக்கப்பட்டது