அறிவியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவடிபடையில் அறிவது.இயற்கையை நோக்கி அடிப்படையான பகுத்தறிவு நோக்கிலான அறிவு பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தைப் புரிந்துகொள்ளுதலையும் குறிக்கிறது. ஒன்றைப் பற்றிய ஒரு கருதுகோளை முன்வைத்து, நேர்பட நிகழ்வுகளைப் துல்லியமாய்ப் பார்த்து, தரவுகளைப் பெற்று, பரிசோதித்து, முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறை. இதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொது கோட்பாடு உருவாக்கப்படும். கோட்பாடுகள் இயற்கையின் இயக்கப்பாடுகளை நன்குணரவும், அவற்றை மேலும் உறுதிப்படுத்தியும் மேம்படுத்தியும், எதிர்கூறலுக்கு உதவுவதாகவும் அமையவேண்டும்.
பொருளடக்கம் |
[தொகு] அடிப்படை வகைகள்
[தொகு] வரலாறு
முதன்மைக் கட்டுரை: அறிவியல் வரலாறு
அறிவியல் நோக்கில் அறிதல் தொன்று தொட்டு நிலவியதெனினும், ஐரோப்பாவின் அறிவொளிக் காலமே தற்கால அறிவியல் அறிவு மார்க்கத்திற்க்கு அடித்தளம் இட்டது. அதற்கு முன்னைய சீன, இந்திய, இஸ்லாமிய, ஐரோப்பிய முன்னேற்றங்களை உள்வாங்கி அல்லது தெரிந்து அறிவியல் வழிமுறை சீர் செய்யப்பட்டது.
[தொகு] துறைகள்
[தொகு] இயற்கை அறிவியல்
அறிவியல் என்பது இயற்பியல், வேதியியல், உயிரியல், வானியல் ஆகியவற்றையே சிறப்பாக குறிக்கிறது. இவை இயற்கை அறிவியல் என்று இப்போது அறியப்படுகின்றன. இயற்கை அறிவியலில் கணிதம் பன்முக வலுவோடு பயன்படுகிறது. இவை பற்றி துல்லியமாக புறவயமாக ஆய முடிவதால் இவற்றை வலு அறிவியல் துறைகள் (hard sciences) எனபர்.
[தொகு] Formal Sciences
[தொகு] சமூக அறிவியல்
சமூகவியல், மானிடவியல், அரசறிவியல், பொருளியல் போன்ற துறைகள் சமூக அறிவியல் துறைகள் ஆகும். இத்துறைகளில் மனிதர் தொடர்புடையவை. அகம் தொடர்புடையவை. ஆகையால் அறிவியல் முறைமைகளை முழுமையாகப் பயன்படுத்தி, உறுதியான கோட்பாடுகளை உருவாக்குவது சிரமமானது.
[தொகு] செயல்முறை அறிவியல்
[தொகு] அறிவியல் வழிமுறை
முதன்மைக் கட்டுரை: அறிவியல் வழிமுறை
அறிவியல் வழிமுறை என்பது இயற்கையின் இயல்பையும் இயக்கத்தையும் ஆய, புதிய அறிவை பெற, அறிவைத் திருத்த ஒருங்கிணைக்க பயன்படும் நுணுக்கங்கள் (techniques) ஆகும். அறிவியல் வழிமுறை என்று கருதப்பட, அவ்வழிமுறை பின்வரும் கூறுகளின் அடிப்படையில் அமையவேண்டும். அவதானிக்கப்படக்கூடிய, அனுபவத்தால் பரிசோதனையால் அறியப்படக்கூடிய, அளவிடக்கூடிய ஆதாரங்களையும், அவ்வாதாரங்கள் பகுத்தறிவாய்வுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
[தொகு] அறிவியல் சமூகம்
[தொகு] விமர்சனங்கள்
[தொகு] இவற்றையும் பாக்க
- திறந்த பாடத்திட்டங்கள்
- அறிவியலுக்கான பொது நூலகம் (நிறுவனம்)
- அறிவியல் தமிழ்
- அறிவியல் தமிழ் மன்றம்
- தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப பேரவை
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] வெளி இணைப்புகள்
- பாட நூல்கள் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (வலைத்தளம்) - (தமிழில்)
- விஞ்ஞானம் - நூலகம் திட்டம் - (தமிழில்)
- அறிவியல் கூட்டு வலைப்பதிவு - (தமிழில்)
- அறிவியல் தமிழ்
- Science Daily - (ஆங்கிலத்தில்)
- அறிவியல் வலைப்பதிவுகள் - (ஆங்கிலத்தில்)