வலைவாசல்:அறிவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ் | பண்பாடு | வரலாறு | அறிவியல் | கணிதம் | புவியியல் | சமூகம் | தொழில்நுட்பம் | நபர்கள்


தொகு  

அறிவியல் வலைவாசல்

அறிவியல் என்பது பொதுவாக அறிவின் அடிப்படையில் ஏதொன்றையும் முறைப்படி அணுகி யாரும் சரிபார்த்து உறுதி செய்யும் வண்ணம் உண்மைகளைக் கண்டு நிறுவப்பெறும் அறிவுத்துறையாகும். இது பெரும்பாலும் இரு பெரும் பிரிவுகளாக வகுக்கப்படுகிறது. இயற்கையில் உள்ள புறபொருட்களின் அமைப்பு மற்றும் இயக்கங்கள் பற்றியதை, இயற்கைப்பொருள் அறிவியல் என்றும், மக்கள் குழுமங்கள், வாழ்க்கை, அரசியல், மொழியியல் முதலியன குமுக அறிவியல் அல்லது சமூக அறிவியல் என்றும் பிரிக்கப்படுகின்றது. அறிவியலை அடிப்படைத் தூய அல்லது தனி அறிவியல் என்றும் பயன்பாட்டு அல்லது பயன்முக அறிவியல் என்றும் பிரிப்பதும் உண்டு. கணிதவியலை இயற்கைப்பொருள் அறிவியலில் ஒரு உட்துறையாகக் கருதுவோரும் உண்டு, அதனைத் தனியானதொரு அடிப்படை அறிவியல் துறையாகக் கொள்வாரும் உண்டு.


சிறப்புக் கட்டுரை
Dynamite-5.svg

டைனமைட்டு என்பது நைட்ரோகிளிசரின் என்ற வெடி மருந்தினால் அமைந்தது. தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டவை டயட்டம் மண் அல்லது பிற உறிஞ்சும் தன்மையுள்ள பொருட்களான கிளிஞ்சல் பொடி, களிமண், ரம்பத்தூள், மரக்கூழ் என்பனவாகும். ரம்பத்தூள் போன்ற கரிமப்பொருட்களை பயன்படுத்தும் டயனமைட்டு குறைந்த சமநிலையுடன் இருப்பதால் இதன் பயன்பாடு முற்றிலும் கைவிடப்பட்டது. சுவீடனைச் சேர்ந்த பொறியியலாளரும் வேதியியல் வல்லுனருமான ஆல்பிரட் நோபல் என்பவரால் கிரம்மல் (கீச்தச்ட் சிலேச்விக்-ஹோல்ச்டீன்,செருமனி) என்னுமிடத்தில் டயனமைட்டு கண்டுபிடிக்கப்பட்டு, 1867 ஆம் ஆண்டு காப்புரிமை பெறப்பட்டது. இந்த வெடி வகை பொருளின் பெயர் ஆற்றலுடன் தொடர்புடையது என பொருள்படும் டயனமிஸ் என்ற கிரேக்க வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியது. . மேலும்...


Chandrayaan-1.jpg

சந்திரயான்-1 என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2008, அக்டோபர் 22 இல் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் நிலவுப்பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழு நிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்கலும் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனமான பி.எஸ்.எல்.வி. சந்திராயன் I கலத்தை 240 கி.மீ x 24000 கி.மீ புவிச் சுற்றுப்பாதையில் செலுத்தியது. பின்னர், விண்கலமானது தன்னகத்துள்ள முன்னுந்து அமைப்பின் துணைகொண்டு நிலவைச்சுற்றிய 100 கி.மீ துருவச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. சந்திராயன் I விண்கலமானது சுற்றிவரக்கூடிய அமைப்பையும் நிலவில் இறங்கக்கூடிய அமைப்பையும் ஒருங்கே கொண்டிருந்தது. இப்பணித்திட்டத்தின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை. இந்தியாவின் ஆய்வுக் கருவிகள் போக பன்னாட்டு விண்வெளி நிறுவனங்களான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் பல்கேரியாவின் ஆய்வுக் கருவிகளும் இத்திட்டத்தில் அடங்கும். மேலும்...

அறிவியல் பகுப்புகள்


உங்களுக்குத் தெரியுமா?
Chromosome-upright.png
  • பண்பலை என்பது வானொலி தொழில்நுட்பத்தில், சைகைகளை ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாக ஏற்றி அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள் ஆகும்.
தொகு  

சிறப்புப் படம்


காலியம்
காலியம் ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 31 மற்றும் இதன் அணுக்கருவில் 39 நொதுமிகளும் உள்ளன. பார்ப்பதற்கு இது வெண்சாம்பல் அல்லது வெள்ளிய வெண்மை நிறத்தில் உள்ள மாழையிலி வகையைச் சேர்ந்த தனிமம். இது அறைவெப்பநிலையில் திண்மமாக உள்ளது, ஆனால் எளிதில் உடையும் பண்பு உடையது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:அறிவியல்&oldid=1126952" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்