இந்திய விண்வெளி ஆய்வு மையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுரோ சின்னம் |
|
| நிறுவியது | ஆகத்து 15, 1969 |
|---|---|
| தலைமையகம் | அன்தரிக்ஷ் பவன், நியு பெல் ரோட், பெங்களூரு, இந்தியா |
| முதன்மை விண்வெளி நிலையம் | சதீஷ் தாவன் விண்வெளி மையம் |
| மேலாளர் | கே. ராதாகிருஷ்ணன் (தலைவர்) |
| செலவு | |
| இணையதளம் | இசுரோ இணையத்தளம் |
இஸ்ரோ (ISRO) என்னும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organization) இந்தியாவின் தேசிய விண்வெளி மையம் ஆகும். பெங்களூரில் தலைமை பணியகம் கொண்ட இஃச்ரோ 1969இல் உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இஃச்ரோவில் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ 41 பில்லியன் ரூபாய் செலவில் செயலாற்றப் படுகிறது. கே. ராதாகிருஷ்ணன் தற்போது இஃச்ரோவின் தலைவர் ஆவார்.
[தொகு] மையங்கள்
முனைவர் விக்ரம் சாராபாய் இந்திய விண்வெளி ஆய்வுவின் தந்தை
- விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம்.
- இஸ்ரோ செயற்கைகோள் மையம், பெங்களூரு.
- விண்வெளி பயன்முறை மையம், அகமதாபாத்.
- சதீஷ் தவான் விண்வெளி மையம், சிரீகரிக்கோட்டா.
- இஸ்ரோ தொலைமதி சுவடுதொடரல் மற்றும் கட்டளை வலையமைப்பு, பெங்களூரு.
- தலைமைக் கட்டுப்பாட்டு வசதி, காசன்.
- குறைகடத்தி ஆய்வகம், சந்திகார்.
- திரவ உந்துகை அமைப்பு மையம், பெங்களூரு.
- திரவ உந்துகை அமைப்பு மையம், வல்லியமலா.
- திரவ உந்துகை அமைப்பு மையம், மகேந்திரகிரி.
- ஆந்த்ரிக்சு கழகம் (இசுரோ தலைமையகம்), பெங்களூரு.
- தேசிய தொலையுணர்வு மையம், ஐதராபாத்.
- இந்திய தொலையுணர்வு நிலையம், தேராதூன்.
- இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், ஆமதாபாது.
[தொகு] உலகளாவிய ஒத்துழைப்பு
இசுரோ தொடங்கப்பெற்ற காலத்திலிருந்து பல்வேறு நாடுகள் இசுரோவிற்கு பலவகைகளில் ஒத்துழைப்பை நல்கி வருகின்றன.
இசுரோ மற்றும் விண்வெளித் துறையும் பல்வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளன. அவைகளாவன:-