எல்பா ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எல்பா | |
|---|---|
| செக் குடியரசில் எல்பா | |
| மூலம் | செக் குடியரசு |
| வாயில் | வட கடல் |
| பாயும் நாடுகள் | செக் குடியரசு, ஜெர்மனி |
| நீளம் | 1091 கி.மீ |
| சராசரி வெளியேற்றம் | 303 ச.மீ/வினாடி |
| வடிநிலப்பரப்பு | 148,268 ச. கிமீ |
எல்பா ஆறு (Elbe River) மத்திய ஐரோப்பாவிலுள்ள ஒரு ஆறு. செக் குடியரசில் உருவாகி ஜெர்மனி வழியாகப் பாய்ந்து வட கடலில் கலக்கிறது. 1091 கி. மீ நீளமுள்ள இந்த ஆறு செக் மொழியில் லாபா (labe) என்று வழங்கப்படுகிறது. வில்டாவா, சாலே, ஹாவெல், மல்டே, ஷ்வார்ஸ் எல்ஸ்டர், ஓஹர் ஆகியவை இதன் முக்கிய கிளை ஆறுகள்.