பெரும் இன அழிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மே/ஜூன் 1944 இல் ஆஸ்ச்விட்ஸ் வதைமுகாமில் "தேர்வு" நடைபெறுகிறது. வலப்பக்கம் உள்ளவர்கள் அடிமை வேலைக்கும், இடப்பக்கத்தில் உள்ளவர்கள் வாயு அறைக்கும் அனுப்பப்படவுள்ளனர். இப்படம் ஹங்கேரியிலிருந்து யூதர்கள் கொண்டுவரப்படுவதைக் காட்டுகிறது. ஏர்ன்ஸ்ட் ஹாப்மன் அல்லது பேர்னாட் வால்ட்டர் பிடித்த படம்.[1]

பெரும் இன அழிப்பு என்பது இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கப் பயன்படும் ஆங்கிலச் சொல்லான ஹாலோகோஸ்ட் (Holocaust) என்பதற்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அக்காலத்தில் ஜேர்மனியில் ஆட்சியில் இருந்த, அடொல்ஃப் ஹிட்லரின் தலைமையிலான தேசிய சோசலிச ஜேர்மன் தொழிலாளர் கட்சியின் (நாஸி) இன அழிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக கீழ் இடம்பெற்றது. யூதர்கள் தவிர வேறும் பிற இனத்தவர்களும், பிரிவினரும் கூடப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களுள், ஜிப்சிகள், சோவியத் ஒன்றியத்தவர், பொதுவுடமைவாதிகள், போல் இனத்தவர், பிற சிலாவிய மக்கள், ஊனமுற்றோர், தன்னினச் சேர்க்கையாளர், அரசியல் எதிரிகள், மாறுபட்ட சமயக்கருத்துக் கொண்டவர்கள் என்போரும் அடங்குவர். பல அறிஞர்கள் பெரும் இன அழிப்பு என்னும் போது மேற்படி எல்லாப் பிரிவினரையும் சேர்த்துக் கொள்ளாமல் யூதர்களின் படுகொலையை மட்டுமே குறிப்பர். ஜேர்மன் அரசு இதனை "யூதர் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு" என வர்ணித்தது. நாஸி ஜேர்மனியில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எல்லாப் பிரிவினரதும் மொத்தத் தொகை 9 தொடக்கம் 11 மில்லியன் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இத் தொல்லைகளும் படுகொலைகளும் ஜேர்மனியின் அரசினால் பல படிகளில் நிறைவேற்றப்பட்டன. யூதர்களைக் குடிமக்கள் சமூகத்திலிருந்து விலக்கும் சட்டம் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே இயற்றப்பட்டது. வதைமுகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கே கொண்டு வரப்படுபவர்கள் களைப்பாலும், நோயாலும் இறக்கும்வரை அடிமைகளாக வேலை வாங்கப்பட்டனர். கிழக்கு ஐரோப்பாவில் புதிய பகுதிகளைக் கைப்பற்றிய ஜெர்மனி, சிறப்புப் படையணிகள் மூலம், யூதர்களையும், அரசியல் எதிரிகளையும் கொன்று குவித்தது. யூதர்களும், ரோமாக்களும் நெருக்கடியான பகுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுப் பின்னர் அங்கிருந்து சரக்குத் தொடர்வண்டிகள் மூலம் நூற்றுக் கணக்கான மைல்கள் தொலைவில் இருந்த கொலை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பலர் வழியிலேயே இறந்து போயினர். எஞ்சியோர் நச்சுவாயு அறைகளுள் அடைத்துக் கொல்லப்பட்டனர். அக்கால ஜேர்மனியின் அதிகார அமைப்பின் ஒவ்வொரு பிரிவும் இக் கொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. ஜெர்மனி ஒரு இனப்படுகொலை அரசாக விளங்கியது என ஓர் அறிஞர் குறிப்பிட்டார்.

இன அழிப்பு முகாம்கள்[தொகு]

அண்ணளவாக. ஒவ்வொரு இன அழிப்பு முகாமிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை[2]
முகாமின் பெயர் இறந்தோர் தொகை ஆள்கூற்று சான்று.
அவுஸ்விட்ச் II 1,000,000 50°2′9″N 19°10′42″E / 50.03583, 19.17833 (Oświęcim (Auschwitz, Poland)) [3][4][5][6]
பெல்செக் 600,000 50°22′18″N 23°27′27″E / 50.37167, 23.4575 (Belzec (Poland)) [7][8]
கெல்மினோ 320,000 52°9′27″N 18°43′43″E / 52.1575, 18.72861 (Chełmno (Poland)) [7][9]
ஜசேனோவக் 58–97,000 45°16′54″N 16°56′6″E / 45.28167, 16.935 (Jasenovac (Sisačko-Moslavačka, Croatia)) [10][11]
மஜ்டனெக் 360,000 51°13′13″N 22°36′0″E / 51.22028, 22.6 (Majdanek (Poland)) [12][13]
மலே டிரொஸ்டினெட்ஸ் 65,000 53°51′4″N 27°42′17″E / 53.85111, 27.70472 (Malyy Trostenets (Belarus)) [14][15]
சொபிபோர் 250,000 51°26′50″N 23°35′37″E / 51.44722, 23.59361 (Sobibór (Poland)) [16][17]
டிரெபிலிங்கா 870,000 52°37′35″N 22°2′49″E / 52.62639, 22.04694 (Treblinka (Poland)) [18][19]

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறப்பு எண்ணிக்கை[தொகு]

பாதிக்கப்பட்டவர்கள் இறந்தோர் தொகை மூலம்
யூதர்கள் 5.9 மில்லியன் [20]
சோவியத் போர் கைதிகள் 2–3 மில்லியன் [21]
பாரம்பரிய போலந்தினர் 1.8–2 மில்லியன் [22][23]
ரோமானி 220,000–1,500,000 [24][25]
ஊனமுற்றோர் 200,000–250,000 [26]
ஃப்ரீமேசன்ஸ் 80,000–200,000 [27][28]
ஸ்லோவேனியர்கள் 20,000–25,000 [29]
ஓரினச்சேர்க்கையாளர்கள் 5,000–15,000 [30]
யெகோவாவின்
சாட்சிகள்
2,500–5,000 [31]
எசுப்பானியக் குடியரசுக் கட்சியினர் 7000 [32]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Auschwitz Album", Yad Vashem.
  2. Source: Yad Vashem. Retrieved 7 May 2007
  3. Memorial and Museum Auschwitz-Birkenau
  4. Piper 1998, p. 62.
  5. Per Yadvashem.org [தொடர்பிழந்த இணைப்பு], Auschwitz II total numbers are "between 1.3M–1.5M", so we use the middle value 1.4M as estimate here.
  6. Coordinates from: Auschwitz concentration camp
  7. 7.0 7.1 Belzec, Yad Vashem.
  8. Coordinates from: Belzec extermination camp
  9. Coordinates from: Chełmno extermination camp
  10. Jasenovac, Yad Vashem.
  11. Coordinates from: Jasenovac concentration camp
  12. Majdanek, Yad Vashem.
  13. Coordinates from: Majdanek
  14. Maly Trostinets, Yad Vashem.
  15. Coordinates from: Maly Trostenets extermination camp
  16. Sobibor, Yad Vashem.
  17. Coordinates from: Sobibor extermination camp
  18. Treblinka, Yad Vashem.
  19. Coordinates from: Treblinka extermination camp
  20. Dawidowicz, Lucy. The War Against the Jews, Bantam, 1986.p. 403
  21. Berenbaum 2005, p. 125.
  22. 1.8–1.9 மில்லியன் non-Jewish Polish citizens are estimated to have died as a result of the Nazi occupation and the war. Estimates are from Polish scholar, Franciszek Piper, the chief historian at Auschwitz. Poles: Victims of the Nazi Era at the United States Holocaust Memorial Museum.
  23. Piotrowski, Tadeusz. "Project InPosterum: Poland WWII Casualties". Retrieved 15 March 2007; and Łuczak, Czesław. "Szanse i trudności bilansu demograficznego Polski w latach 1939–1945", Dzieje Najnowsze, issue 1994/2.
  24. "Genocide of European Roma (Gypsies)". Holocaust Encyclopedia. United States Holocaust Memorial Museum. Retrieved 27 September 2012. The USHMM places the scholarly estimates at 220,000–500,000. According to Berenbaum 2005, p. 126, "serious scholars estimate that between 90,000 and 220,000 were killed under German rule."
  25. Hancock 2004, pp. 383–96.
  26. Ryan & Schuchman 2002, p. 62.
  27. "GrandLodgeScotland.com". GrandLodgeScotland.com. பார்த்த நாள் 31 July 2010.
  28. Freemasons for Dummies, by Christopher Hodapp, Wiley Publishing Inc., Indianapolis, 2005, page 85, sec. Hitler and the Nazis
  29. The number of Slovenes estimated to have died as a result of the Nazi occupation (not including those killed by Slovene collaboration forces and other Nazi allies) is estimated between 20,000 and 25,000 people. This number only includes civilians: Slovene partisan POWs who died and resistance fighters killed in action are not included (their number is estimated at 27,000). These numbers however include only Slovenes from present-day Slovenia: it does not include Carinthian Slovene victims, nor Slovene victims from areas in present-day Italy and Croatia. These numbers are result of a 10-year long research by the Institute for Contemporary History (Inštitut za novejšo zgodovino) from Ljubljana, Slovenia. The partial results of the research have been released in 2008 in the volume Žrtve vojne in revolucije v Sloveniji (Ljubljana: Institute for Conetmporary History, 2008), and officially presented at the Slovenian National Council ([File:http://www.ds-rs.si/?q=publikacije/zborniki/Zrtve_vojne]). The volume is also available online: [File:http://www.ds-rs.si/dokumenti/publikacije/Zbornik_05-1.pdf]
  30. The Holocaust Chronicle, Publications International Ltd., p. 108.
  31. Shulman, William L. A State of Terror: Germany 1933–1939. Bayside, New York: Holocaust Resource Center and Archives.
  32. Pike, David Wingeate. Spaniards in the Holocaust: Mauthausen, the horror on the Danube; Editorial: Routledge Chapman & Hall ISBN 9780415227803. London, 2000.
"http://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்_இன_அழிப்பு&oldid=1641674" இருந்து மீள்விக்கப்பட்டது