தன்யூப் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புடாபெஸ்ட்டில் உள்ள மார்கிட் பாலத்திலிருந்து தன்யூப் ஆற்றின் தோற்றம்
தன்யூப் ஆற்றின் பாதை

தன்யூப் ஆறு (அல்லது டான்யூப் ஆறு) ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக நீளமானதும், ஐரோப்பாவில் இரண்டாவது நீளம் கூடியதுமான ஆறு. இது ஜெர்மனியில் உள்ள கருப்புக் காட்டில் இருந்து, பிரிகாக் (Brigach), பிரெக் (Breg) என்னும் இரண்டு சிறு ஆறுகளாகத் தோற்றம் பெறுகின்றது. இவை இரண்டும் இணையும் இடத்திலிருந்தே தன்யூப் ஆறு எனப் பெயர் பெறுகின்றது. இந்த ஆறு, கிழக்கு முகமாக 2850 கிமீ (1771 மைல்கள்) ஓடிப் பல கிழக்கு ஐரோப்பியத் தலைநகரங்கள் ஊடாகப் பாய்ந்து இறுதியில், ருமேனியா, உக்ரேன் ஆகிய நாடுகளிலுள்ள தன்யூப் கழிமுகத்தினூடாகக் கருங்கடலில் கலக்கிறது.

தற்போது உள்ளது போலவே தன்யூப் ஆறு பல நூற்றாண்டுகளாக முக்கியமான ஒரு அனைத்துலக நீர்வழியாக இருந்து வருகிறது. வரலாற்றில், ரோமப் பேரரசின் நீண்ட கால முன்னிலை எல்லையாக இருந்துவந்த இது, இன்று பத்து நாடுகளின் எல்லைகளின் ஊடாகப் பாய்ந்து செல்கிறது அல்லது, அவ்வெல்லைகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இந்நாடுகள், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, குரோசியா, செர்பியா, பல்கேரியா, ருமேனியா, மோல்டோவா, உக்ரேன் என்பவையாகும். இவற்றுடன், இதன் வடிநிலம் இத்தாலி, போலந்து, சுவிட்சர்லாந்து, செக் குடியரசு, ஸ்லோவேனியா, பொஸ்னியாவும் ஹெர்சகொவினாவும், மொண்டெனேகுரோ, மசிடோனியக் குடியரசு, அல்பேனியா ஆகிய மேலும் பல நாடுகளின் பகுதிகளாக அமைந்துள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தன்யூப்_ஆறு&oldid=1347932" இருந்து மீள்விக்கப்பட்டது