1839
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1800கள் 1810கள் 1820கள் - 1830கள் - 1840கள் 1850கள் 1860கள் |
| ஆண்டுகள்: | 1836 1837 1838 - 1839 - 1840 1841 1842 |
| 1839 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1839 MDCCCXXXIX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1870 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2592 |
| சீன நாட்காட்டி | 4535-4536 |
| எபிரேய நாட்காட்டி | 5598-5599 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1894-1895 1761-1762 4940-4941 |
| இரானிய நாட்காட்டி | 1217-1218 |
| இசுலாமிய நாட்காட்டி | 1254 – 1255 |
| ரூனிக் நாட்காட்டி | 2089
|
1839 (MDCCCXXXIX) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 19 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஏடன் நகரைக் கைப்பற்றியது.
- ஜூன் 17 - ஹவாய் பேரரசில் கத்தோலிக்கர் தமது சமயத்தை வழிபடுவதற்கு அனுமதிக்கப்பட்டது.
- ஜூன் 22 - லூயி டகுவேர் தனது ஒளிப்படக் கருவிக்கான காப்புரிமம் பெற்றார்.
- ஜூலை 23 - பிரித்தானியப் படையினர் ஆப்கானித்தானின் காஸ்னி நகரைக் கைப்பற்றினர்.
- ஆகஸ்ட் 23 - சீனாவின் கிங் சீனர்களுடன் போரிடுவதற்காக ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கைக் கைப்பற்றியது.
- செப்டம்பர் 9 - அலபாமாவில் இடம்பெற்ற பெரும் தீயில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் எரிந்து சேதமடைந்தன.
- நவம்பர் 25 - இந்தியாவில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் கொரிங்கா நகரம் முற்றாக அழிந்தது. 300,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள் [தொகு]
- இரப்பர் பதனிடலை சார்ல்ஸ் குடியர் கண்டுபிடித்தார்.
- ஜி. யு. போப் சமயப்பணி புரிவதற்காக தமிழ்நாடு வந்தார்.
- மிசூரி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, யாழ் நகரில் 62,137, மல்லாகத்தில் 45,305, தென்மராட்சியில் 43,927, வடமராட்சியில் 35,747, தீவுப்பகுதியில் 25,292 என மொத்தம் 212,408 பேர் பதிவாயினர்.
பிறப்புக்கள் [தொகு]
- ஜனவரி 19 - பால் செசான், பிரெஞ்சு ஓவியர் (இ. 1906)
- மார்ச் 13 - ஜாம்செட்ஜி டாட்டா, இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி (இ. 1904)
- தண்டபாணி சுவாமிகள், தமிழ்ப் புலவர் (இ. 1898)
இறப்புக்கள் [தொகு]
- ரஞ்சித் சிங், 1780-1839) பஞ்சாபிகளின் சீக்கியப் பேரரசின் மன்னர் (பி. 1780)