ஜூன் 14
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூன் 14 கிரிகோரியன் ஆண்டின் 165ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 166ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 200 நாட்கள் உள்ளன.
| << | ஜூன் 2008 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
| MMVIII | ||||||
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1800 - நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவம் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று இத்தாலியை மீளவும் கைப்பற்றியது.
- 1872 - கனடாவில் தொழிற் சங்கங்கள் அதிகாரபூர்வமாக்கப்பட்டன.
- 1900 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: பாரிஸ் ஜெர்மனியின் வசமாகியது.
- 1962 - ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1967 -சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டைச் சோதித்தது.
- 1982 - போக்லாந்து போர் முடிவுக்கு வந்தது. ஆர்ஜென்டீனா நிபந்தனை இன்றி பிரித்தானியாவிடம் சரணடைந்தது.
- 1985 - TWA 847 விமானம் கிறீசில் இருந்து ரோம் செல்லுகையில் ஹெஸ்புல்லா இயக்கத்தினரால் கடத்தப்பட்டது.
- 1999 - தென்னாபிரிக்காவின் அதிபராக தாபோ ம்பெக்கி பதவியேற்றார்.
- 2002 - கராச்சியில் அமெரிக்க தூதராலயத்துக்கு முன்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12பேர் கொல்லப்பட்டு 50 பேர் காயமடைந்தனர்.
- 2003 - விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் ஒன்று இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- 1899 - யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற யப்பானிய எழுத்தாளர் (இ. 1972)
- 1929 - சே குவேரா, சோசலிசப் புரட்சியாளர் (இ. 1967)
- 1969 - ஸ்ரெஃபி கிராஃப், ஜெர்மனிய டென்னிஸ் வீராங்கனை
[தொகு] இறப்புகள்
- 1968 - Salvatore Quasimodo, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளர் (பி. 1901)
[தொகு] சிறப்பு நாள்
- போக்லாந்துத் தீவுகள் - விடுதலை நாள்
- ஐக்கிய அமெரிக்கா - கொடி நாள்
- ஆப்கானிஸ்தான் - அன்னையர் நாள்
- உலக இரத்த வழங்கல் நாள்
- உலக வலைப்பதிவர் நாள்

