க. சீ. கிருட்டிணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன்
Krishnan..jpg
பிறப்பு திசம்பர் 4, 1898(1898-12-04)
பிறப்பிடம் வத்திராயிருப்பு, விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு சூன் 14 1961 (அகவை 62)
தேசியம் இந்தியா
துறை இயற்பியல்
பணி நிறுவனம் மதராசு கிறித்துவக் கல்லூரி
அறிவியல் வளர்ச்சிக்கான இந்திய குழுமம்
தாக்கா பல்கலைக்கழகம்
அல்லகாபாது பல்கலைக்கழகம்
தேசிய இயற்பியல் ஆய்வகம்
பல்கலைக்கழகம் அமெரிக்கன் கல்லூரி, மதுரை
மதராசு கிறித்துவக் கல்லூரி
கொல்கத்தா பல்கலைக்கழகம்
அறியப்படுவது இராமன் விளைவு
படிகத்திய காந்தவியல்
காந்தம்சார் வேதியியல்
காந்தப்பண்புடைய படிகங்களில் சீர்மாறும் காந்தத்தன்மையை அளவிடும் நுட்பங்கள்s
விருதுகள் பத்ம பூசன்
ராயல் சொசைட்டி ஃவெல்லோ(FRS)
செவீரன்(Knighthood)
பட்னாகர் நினைவுப் பரிசு
மதம் இந்து

சர், கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் (Kariamanickam Srinivasa Krishnan, கே. எசு. கிருட்டிணன்), டிசம்பர் 4 1898சூன் 14 1961) ஒரு புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளர். ஒளிச்சிதறல் விளைவுகளில் இராமன் விளைவை கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற சர். சி. வி. இராமன் உடன் இணைந்து இவரும் இக் கண்டுபிடிப்பில் பங்கு கொண்டார்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கை

கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன், பொதுவாக கே. எசு. கிருட்டிணன் (K. S. Krishnan) அல்லது கே.எசு.கே (KSK) என்றே அறியப்பட்டார். இவர் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு (Watrap) என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை வேளாண்மைத் தொழில் செய்துகொண்டிருந்தார். அவர் தமிழிலும் சமசுக்கிருதத்திலும் ஆழமான புலமையும் அறிவும் கொண்டிருந்தார். கிருட்டிணன், திருவில்லிப்புத்தூரில் இருந்த ஜி.எசு. இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.

இவர் 1940 இல் பிரித்தானியாவில் உள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாகத் தேர்வு செய்யப்பட்டார். 1946 இல் செவ்வீரர் (சர், knight) என்று பெருமைப்படுத்தப்பட்டார். 1954 ஆம் ஆண்டும் இந்தியாவின் பத்ம பூசன் விருது பெற்றார்[1]. 1961 இல் பட்னாகர் நினைவுப் பரிசு பெற்றார்.

[தொகு] வகித்த பதவிகள்

  • சர்வதேச பௌதிக ஆராய்ச்சி இந்திய தேசிய கமிட்டியின் தலைவர்.
  • தேசிய பௌதிக ஆராய்ச்சி கமிட்டியின் இயக்குனர்.

[தொகு] கிருட்டிணன் தமிழில் எழுதிய கட்டுரைகள்

  • நான் விஞ்ஞானத்தில் ஈடுபட்டவிதம்.
  • பூமியின் வயது என்ன.
  • சூரிய சக்தி.
  • உலக புரட்சியாளர் ஐன்ஸ்டைன்.[2]

[தொகு] கிருட்டிணன் பற்றிய புகழ்ச்சொற்கள்

  • இந்திய தலைமை அமைச்சர் சவகர்லால் நேரு: "என்ன குறிப்பிடத்தகுந்தது என்றால், கிருட்டிணன் மிகச்சிறந்த அறிவியலர் மட்டுமல்ல, அதைக்காட்டிலும் மேலானவர். அவர் நிறைமையான குடிமகன், ஒருங்கிணைந்த நற்பண்புகள் கொண்ட நிறைமனிதர்".

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] உசாத்துணை

[தொகு] மேற்க்கோள்கள்

  1. http://www.mha.nic.in/pdfs/PadmaAwards1954-2007.pdf
  2. Dr K.S.Krishnan's 60th Birthday Souvenir 1958.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=க._சீ._கிருட்டிணன்&oldid=1041585" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்