1811
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1780கள் 1790கள் 1800கள் - 1810கள் - 1820கள் 1830கள் 1840கள் |
| ஆண்டுகள்: | 1808 1809 1810 - 1811 - 1812 1813 1814 |
| 1811 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1811 MDCCCXI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1842 |
| சீன நாட்காட்டி | 4507-4508 |
| எபிரேய நாட்காட்டி | 5570-5571 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1866-1867 1733-1734 4912-4913 |
| இரானிய நாட்காட்டி | 1189-1190 |
| இஸ்லாமிய நாட்காட்டி | 1231-1232 |
| ரூனிக் நாட்காட்டி | 2061
|
1811 (MDCCCXI) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- மார்ச் 1 - எகிப்திய மன்னன் முகமது அலி கடைசி மாம்லுக் தலைவர்களைக் கொன்றான்.
- மார்ச் 13 - பிரித்தானியர் பிரெஞ்ச்ப் படைகளை லீசா (Lissa) என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.
- மார் 25 - 260 நாட்கள் தொடர்ச்சியாக வானில் தெரிந்த வால்வெள்ளி (Comet) ஒன்றை Honoré Flaugergues என்பவர் கண்டுபிடித்தார்.
- ஏப்ரல் 5 - 6 - புவனர்ஸ் அயரெசில் புரட்சிக் கலவரங்கள் இடம்பெற்றன.
- மே 14 - பரகுவே ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.
- ஜூலை 5 - வெனிசுவேலா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- ஜூலை 11 - இத்தாலிய அறிவியலாளர் அவகாதரோ வளிம மூலக்கூறுகள் பற்றிய தனது குறிப்புகளை வெளியிட்டார்.
- நவம்பர் 8 - இலங்கையின் இயற்றப்பட்ட புதிய நீதிமன்ற சட்டப்படி மேல் நீதிமன்றம் (Supreme Court) இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று கொழும்பில் பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், Puisne Justice என அழைக்கப்படும் நீதிமன்றம் யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டன. கிரிமினல் வழக்குகளுக்கு ஜூரி முறையும் அமுலுக்கு வந்தது.
[தொகு] தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- பொலீவியா விடுடலையை அறிவித்தது.
- நெடுந்தீவின் முழு அதிகாரமும் எட்வேர்ட் நோலன் என்பவனுக்கு வழங்கப்பட்டது.
- சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி (நாவல்) வெளியானது.

