செப்டம்பர் 4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | செப்டம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
| MMXIII | ||||||
செப்டம்பர் 4 கிரிகோரியன் ஆண்டின் 247வது நாளாகும். நெட்டாண்டுகளில் 248வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 118 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 476 - கடைசி ரோமப் பேரரசன் ரொமூலஸ் ஆகுஸ்டஸ் முடிதுறந்தான்.
- 1666 - லண்டன் மாநகரில் மூன்று நாட்களாக இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 13,000 இற்கும் அதிகமான வீடுகள் அழிந்தன.
- 1781 - லாஸ் ஏஞ்சலஸ் நகரம் ஸ்பானிய ஆளுநரான ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் அமைக்கப்பட்டது.
- 1870 - பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் பதவியில் இருந்து அகற்றப்பட்டான். அரசி யூஜின் தனது பிள்ளைகளுடன் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினாள். மூன்றாவது குடியரசு அமைக்கப்பட்டது.
- 1884 - குற்றவாளிகளை ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சுக்கு அனுப்பும் கொள்காஇயை பிரித்தானியா கைவிட்டது.
- 1886 - 30 ஆண்டுகள் போரின் பின்னர் அப்பாச்சி பழங்குடிகளின் தலைவன் ஜெரனிமோ தனது படைகளுடன் அரிசோனாவில் சரணடைந்தான்.
- 1888 - தான் கண்டுபிடித்த படம்பிடிகருவிக்கு ஜார்ஜ் ஈஸ்ட்மன் கோடாக் என்பதை வர்த்தகக் குறியீடாக காப்புரிமை பெற்றுக் கொண்டார்.
- 1939 - இரண்டாம் உலகப் போர்: நேபாளம் ஜெர்மனி மீது போரை அறிவித்தது.
- 1939 - இரண்டாம் உலகப் போர்: ஐரோப்பியப் போரில் ஜப்பான் நடுநிலையை அறிவித்தது.
- 1951 - கண்டங்களுக்கிடையேயான முதலாவது நேரடித் தொலைக்காட்சி ஜப்பானில் இடம்பெற்ற அமைதி மாநாஅட்டில் இருந்து இருந்து கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஒளிபரப்பப்பட்டது.
- 1956 - வன்தட்டு நினைவகத்தைக் கொண்ட உலகின் முதலாவது கணினியை ஐபிஎம் அறிமுகப்படுத்தியது.
- 1963 - சுவிஸ் எயார் விமானம் சுவிட்சர்லாந்தில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணஞ் செய்த அனைத்து 80 பேரும் கொல்லப்பட்டனர்.
- 1970 - சல்வடோர் அலெண்டே சிலி நாட்டின் அதிபரானார்.
- 1971 - அலாஸ்காவில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 111 பேரும் கொல்லப்பட்டனர்.
- 1972 - ஐக்கிய அமெரிக்காவின் மார்க் ஸ்பிட்ஸ் ஜெர்மனியின் மியூனிக் நகரில் இடம்பெற்ற 1972 ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சலில் ஏழாவது தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்தார்.
- 1978 - அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
- 1996 - கொலம்பிய புரட்சி இராணுவப் படையினர் கொலம்பியாவின் இரணுவ முகாமொன்றைத் தாக்கினர். மூன்று வாரங்கள் நீடித்த இக்கரந்தடிப் போரில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - இஸ்ரேலின் டெல் அவீவ் நகரின் பாடசாலை ஒன்றின் அடியில் கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஒரு புதைகுழிக் குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
- 2007 - சூறாவளி ஃபீலிக்ஸ் நிக்கராகுவாவைத் தாக்கியதில் பலத்த நிலச்சரிவுகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
பிறப்புக்கள் [தொகு]
- 1941, சுஷீல்குமார் ஷிந்தே, தற்போது இந்தியாவின் நடுவண் அரசில் மின்துறை அமைச்சர்
- 1952 - ரிஷி கபூர், இந்திய நடிகர்
- 1971 - லான்ஸ் க்லூஸ்னர், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்டக்காரர்
- 1981 - பியான்சே நோல்ஸ், அமெரிக்கப் பாடகி
இறப்புகள் [தொகு]
- 2006, ஸ்டீவ் ஏர்வின், ஆஸ்திரேலிய இயற்கை ஆர்வலர், (பி 1962)