சின்யா யாமானாக்கா
| சின்யா யாமானாக்கா Shinya Yamanaka |
|
|---|---|
| பிறப்பு | செப்டம்பர் 4, 1962 |
| பிறப்பிடம் | ஒசாக்கா, சப்பான் |
| தேசியம் | சப்பானியர் |
| கல்வி கற்ற இடங்கள் | கோபே பல்கலைக்கழகம் ஒசாக்கா நகரப் பல்கலைக்கழகம் கிளாடுசுட்டோன் இதயக் குருதிக்குழாய் நோய்கள் கல்விக்கழகம் |
| அறியப்படுவது | தூண்டக்கூடிய பல்வாய்ப்புநிலை குருத்தணு ஆய்வு (Induced pluripotent stem cell) |
சின்யா யாமானாக்கா (Shinya Yamanaka|山中 伸弥, பிறப்பு செப்டம்பர் 4, 1962, இகியாசியோசாக்கா, ஒசாக்கா, சப்பான்) ஒரு சப்பானிய மருத்துவ ஆய்வாளர். இவர் குருத்தணு (குருத்து உயிரணு) ஆய்வில் முன்னணி ஆய்வாளர். 2012 ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசை சான் குர்தோன் அவர்களுடன் சேர்ந்து வென்றுள்ளார். யாமானாக்கா தற்பொழுது குருத்தணு ஆய்வுக்கான அனைத்துலகக ஆய்வுக் குழுமத்தின் தலைவராக உள்ளார். இவர் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் முன்னக மருத்துவ அறிவியல் கல்விக் கழகத்தில் (Institute for Frontier Medical Sciences) பேராசிரியராகவும் இயக்குநராகவும் இருக்கின்றார். கலிபோர்னியாவில் உள்ள கிளாடுசுட்டோன் இதயக் குருதிக்குழாய் நோய்கள் கல்விக்கழகம் என்னும் நிறுவனத்திலும் முதுநிலை ஆய்வாளராக இருக்கின்றார்.
இவர் 2011 ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான வுல்ஃபு பரிசை உருடோல்ஃபு சேனிழ்சு (Rudolf Jaenisch) என்பாரோடு வென்றார்[2]. 2012 ஆம் ஆண்டுக்கான மில்லேனியம் பரிசை இலினசு தோர்வால்டுசு என்பாருடன் சேர்ந்து வென்றார்.
உசாத்துணை [தொகு]
பொதுவான துணைநூல்களும் கட்டுரைகளும்:
- Fackler, Martin (2007-12-11). "Risk Taking Is in His Genes". The New York Times. http://www.nytimes.com/2007/12/11/science/11prof.html?pagewanted=all. Retrieved 2007-12-11.
- The Discovery and Future of Induced Pluripotent Stem (iPS)
- Cloning and Stem Cell Discoveries Earn Nobel in Medicine (New York Times, October 8, 2012)
அடிக்குறிப்புகளும், சான்றுசுட்டுகளும்
- ↑ எஆசு:10.1371/journal.pone.0023657
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ "Shinya Yamanaka Winner of Wolf Prize in Medicine – 2011". Wolf Foundation.
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Shinya Yamanaka தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
|
||||||||||||||||||||