எர்வின் நேயெர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எர்வின் நேயெர் Erwin Neher |
|
|---|---|
எர்வின் நேயெர் (2007) |
|
| பிறப்பு | மார்ச்சு 20, 1944 |
| பிறப்பிடம் | லாண்ட்சுபர்க் ஆம் லெக், பவேரியா, ஜெர்மனி |
| தேசியம் | ஜெர்மானியர் |
| துறை | உயிரியற்பியல் |
| பணி நிறுவனம் | விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகம் யேல் பல்கலைக்கழகம் மேக்ஸ் பிளாங்க் உயிரி இயல் வேதியல் கழகம் |
| பல்கலைக்கழகம் | மியூனிக் தொழில்நுட்ப பல்கலை கழகம் விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகம் |
| விருதுகள் | நோபல் பரிசு (1991) காட்ட்பிரைட் வில்லெம் லெய்ப்நிட்சு பரிசு (1987() |
எர்வின் நேயெர் (Erwin Neher, பிறப்பு: மார்ச் 20, 1944) ஒரு செருமானிய உயிரி இயற்பியலாளர். நேயெர் 1963 முதல் 1966 வரை மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்றார். 1966 இல், இவர் அமெரிக்காவில் படிக்க ஒரு ஃஃபுல்ப்ரைட் உதவித்தொகை வழங்கப்பட்டது. இவர் விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகத்தில் உயிரி இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். 1991ஆம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.