ஹெரால்டு சூர் ஹாசென்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஹெரால்டு சூர் ஹாசென் Harald zur Hausen |
|
|---|---|
| பிறப்பு | மார்ச்சு 11, 1936 |
| பிறப்பிடம் | ஜெல்சென்கிர்சென், ஜெர்மனி |
| தேசியம் | ஜெர்மன் |
| அறியப்படுவது | HPV கருப்பப்பைப் புற்றுநோயைத் தோற்றுவித்தல் |
ஹெரால்டு சூர் ஹாசென் (Harald zur Hausen, பிறப்பு; மார்ச் 11, 1936) நச்சுயிரியல் வல்லுநர் (virologist). இவர் 2008 ஆம் ஆண்டில் உடலியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.
வாழ்க்கை வரலாறு[தொகு]
சூர் ஹாசென், ஜெர்மனியில் பிறந்தார், பான் ஹம்பர்க் மற்றும் டுஸ்ஸெல்டார்ஃப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ ஆய்வு மேற்கொண்டார், டுஸ்ஸெல்டார்ஃப் பல்கலைக்கழகத்தில் 1960 இல் டாக்டர் பட்டம் பெற்றார்.