ஜான் ஓ'கீஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் ஓ'கீஃப்
2014இல் ஜான் ஓ'கீஃப்
துறைநரம்பணுவியல்
பணியிடங்கள்லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி
கல்வி கற்ற இடங்கள்நியூயார்க் நகர கல்லூரி
மக்கில் பல்கலைக்கழகம்
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2014)

ஜான் ஓ'கீஃப் (John O'Keefe, பி: நவம்பர் 18, 1939) அமெரிக்க பிரித்தானிய நரம்பணுவியல் அறிஞரும் பேராசிரியரும் ஆவார். இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் புலன்சார் நரம்பணுவியல் மற்றும் உடற்கூறு துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். மூளையில் உள்ள இடமறியும் உயிரணுக்கள் தான் நாம் சென்று வரும் இடங்களுக்கான வரைபடத்தை மூளையில் உருவாக்குகிறது என்பதை கண்டுபிடித்ததற்காக 2014ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசை மே-பிரிட் மோசர், மற்றும் எட்வர்டு மோசருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.[1]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "2014-ம் ஆண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு;அமெரிக்கா மற்றும் நார்வே நாட்டு விஞ்ஞானிகள் 3 மூவர் இவ்விருதை பெறுகின்றனர்". தினத்தந்தி. 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 6 அக்டோபர் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஓ%27கீஃப்&oldid=3801823" இலிருந்து மீள்விக்கப்பட்டது