மே 27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | மே 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
| MMXIII | ||||||
மே 27 கிரிகோரியன் ஆண்டின் 147ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 148ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 218 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1703 - ரஷ்ய சார் மன்னன் முதலாம் பீட்டர் புனித பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தான்.
- 1860 - இத்தாலியின் ஒற்றுமைக்காக கரிபால்டி சிசிலியின் பலேர்மோ நகரில் தாக்குதலை ஆரம்பித்தான்.
- 1883 - ரஷ்யாவின் மன்னனாக மூன்றாம் அலெக்சாண்டர் முடி சூடினான்.
- 1937 - கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் டன்கேர்க் என்ற இடத்தில் ஜெர்மனியரிடம் சரணடைந்த ஐக்கிய இராச்சியத்தின் நோர்ஃபோக் பிரிவைச் சேர்ந்த 99 பேரில் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் பிஸ்மார்க் போர்க் கப்பல் வட அட்லாண்டிக்கில் மூழ்கடிக்கப்பட்டதில் 2,100 பேர் கொல்லப்பட்டனர்.
- 1960 - துருக்கியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது செலால் பயார் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 1965 - வியட்நாம் போர்: அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தெற்கு வியட்நாம் மீது குண்டுகள் வீசித் தாக்குதலைத் தொடுத்தன.
- 1967 - அவுஸ்திரேலியாவில் நடந்த வாக்கெடுப்பில் ஆதிவாசிகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அடக்கவும் அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்க மக்கள் அங்கீகாரம் அளித்தனர்.
- 1994 - சோவியத் அதிருப்தியாளர் அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின் 20 ஆண்டுகளின் பின்னர் ரஷ்யா திரும்பினார்.
- 1997 - முல்லைத்தீவுக் கடலில் கடற்புலிகள் படகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
- 2006 - ஜாவாவில் நிகழ்ந்த (உள்ளூர் நேரம் காலை 5:53:58, UTC நேரம் மே 26 இரவு 10:53:58) நிலநடுக்கத்தில் 6,000 பேர் வரை பலியாயினர்.
பிறப்புகள் [தொகு]
- 1907 - ராச்சேல் கார்சன், அமெரிக்க உயிரியியலாளர், (இ.1964)
- 1923 - ஹென்றி கிசின்ஜர், நோபல் பரிசு பெற்றவர்.
- 1956 - கிசெப்பே டோர்னடோரே, இத்தாலிய திரைப்பட இயக்குநர்
- 1975 - மைக்கேல் ஹசி, அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்.
- 1977 - மகெல ஜயவர்தன, இலங்கை துடுப்பாட்ட வீரர்.
இறப்புகள் [தொகு]
- 1910 - ராபர்ட் கோக், ஜெர்மனிய அறிவியலாளர் (பி. 1843)
- 1964 - ஜவஹர்லால் நேரு, முதலாவது இந்தியப் பிரதமர் (பி. 1889)
- 1597 - டொன் யுவான் தர்மபால, இலங்கை கோட்டே மன்னன்