பிபன் சந்திரா
பிபன் சந்திரா (பிறப்பு 1928) நவீன இந்திய அரசியல் மற்றும் பொருளாதார வரலாற்றறிஞர்களில் ஒருவர். இடதுசாரி சிந்தனையோட்டம் உடைய வரலாற்றாய்வளர். பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர்களில் ஒருவர்.
பொருளடக்கம் |
பிறப்பும் கல்வியும் [தொகு]
இமாச்சல பிரதேத்தில் பிறந்தவர். லாகூரிலுள்ள போர்மேன் கிறித்துவ கல்லூரியிலும், ஐக்கிய அமெரிக்க நாடுகளிலுள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக்கத்திலும், கல்வி பயின்றார். தில்லி பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொன்டார்.
பணி [தொகு]
தில்லியிலுள்ள இந்து கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியாகவும் பணியாற்றியுள்ளார். மெக்சிகோவிலுள்ள மெக்சிகோ கல்லூரியில் வருகைதரு பேராசிரியராகவும் இருந்துள்ளார்.
பதவி மற்றும் விருது [தொகு]
இந்திய வரலாற்று காங்கிரசின் தலைவராக 1985ஆம் ஆண்டு பதவி வகித்திருக்கிறார். பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினராகவும், தற்போது நேசனல் புக் டிரஸ்டின் அவைத்தலைவராக பதவி வகிக்கிறார்.
2010 ஆம் ஆண்டு பத்ம விபூசண் பெற்றார்.
புத்தகங்கள் [தொகு]
இவருடைய நவீன இந்திய வரலாற்றாய்வுகள் பல புத்தகங்களாக வந்துள்ளன.
- நவீன கால இந்தியா
- சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா
- சுதந்திரத்துக்கான இந்தியாவின் போராட்டம் (1857 முதல் 1947 வரை)
- நவீன இந்தியாவில் மதவாதம்
- நவீன இந்தியாவில் தேசியவாதம் மற்றும் மதவாதம்
- Essays on Indian Nationalism
- Essays on Contemporary India
- Ideology and Politics in Modern India