கே. இராதாகிருஷ்ணன் (அறிவியலார்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கே. ராதாகிருஷ்ணன் | |
|---|---|
| பிறப்பு | 29 ஆகத்து 1949 |
| பிறப்பிடம் | கேரளம், இந்தியா |
| வாழிடம் | |
| தேசியம் | |
| துறை | விண்வெளி ஆராய்ச்சி |
| பணி நிறுவனம் | VSSC |
| கல்வி கற்ற இடங்கள் | இ.தொ.க கரக்பூர் (Ph.D., 2000) இ.மே.க பெங்களூரு (PGDM, 1976) கேரள பல்கலைக்கழகம் (B.Sc. Engg., 1970) |
| அறியப்படுவது | சந்திரயாண் குறித்திட்டம் |
கே. ராதாகிருஷ்ணன் (பிறப்பு 29 ஆகத்து 1949) ஓர் இந்திய அறிவியலாளர் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத் தலைவர் ஆவார்.[1]. அக்டோபர் 31,2009 அன்று இப்பதவியை முனைவர் ஜி. மாதவன் நாயரின் பணி ஓய்வினை அடுத்து ஏற்றார்.[2] இதற்கு முன்னர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரத்தின் நெறியாளராக இருந்துள்ளார். இந்திய மாநிலம் கேரளத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்ஞாலக்குடாவில் பிறந்தவர்.இந்திய புவிஇயற்பியல் ஒன்றிய வாழ்நாள் அங்கத்தினராகவும் உள்ளார்.நுண்கலைகளிலும் தேர்ச்சிபெற்ற இவர் கருநாடக இசைமுறையில் பாடவும் கதகளி நடனமும் தெரியும்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "ISRO gets a new chairman". Deccan Herald. 2009-10-25. http://www.deccanherald.com/content/32322/isro-gets-chairman.html. Retrieved 2009-10-25.
- ↑ "Dr. K. Radhakrishnan made ISRO chief". Press Trust of India. http://www.ptinews.com/news/346110_Dr-K-Radhakrishnan-made-ISRO-chief#. Retrieved 2009-10-24.
- ↑ "Dr K Radhakrishnan made ISRO chief". Hindustan Times. 2009-10-24. http://www.hindustantimes.com/Dr-K-Radhakrishnan-made-ISRO-chief/H1-Article1-468883.aspx#. Retrieved 2009-10-24.