குல்தீப் நய்யார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குல்தீப் நய்யார் (பிறந்தது 14 ஆகஸ்ட்டு 1923ல்) இந்தியாவின் மிக முக்கியமான பத்திரிக்கையாளர் மற்றும் சின்டிகேட்டட் கட்டுரையாளர், இடதுசாரி பார்வை கொண்ட அரசியல் விமர்சகர்.

துவக்க கால வாழ்க்கை[தொகு]

நய்யார் சியால்கோட்டில் 14 ஆகஸ்ட் 1923பிறந்தார். இவருடைய பெற்றோர் குர்பாக்ஷ் சிங் மற்றும் பூரன் தேவி ஆவார். இவர் துவக்கக் கல்வியை சியால்கோட்டிலுள்ள கன்டா உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். இவர் சியால்கோட்டிலுள்ள முர்ரே கல்லூரியிலும், அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள மெடில் இதழியல் கல்லூரிகளிலும் பயின்றார். தத்துவம் புதுதில்லியில் தங்கியிருந்த காலத்தில், மக்களவை உறுப்பினரான மௌலானா ஹஸ்ரத் மொஹானியைச் சந்தித்தார். அவர், குல்தீப்பை ஆங்கிலத்தில் எழுத தூண்டினார்; உருது பத்திரிக்கையாளராய் இருப்பதில் பயனில்லை, ஆகவே ஆங்கிலத்தில் பணியைத்தொடர வற்புறுத்தினார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

குல்தீப் நய்யார் உருது பத்திரிக்கையாளராய் தன் பணியைத்துவக்கினார். இவர் மாநிலங்களைவை உறுப்பினராகவும், ஐ.நா அவையில் இந்திய பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.

நூல் விவரத் தொகுப்பு[தொகு]

குல்தீப் நய்யார் 11 புத்தகங்களை எழுதியுள்ளார். 'எல்லைகளுக்கு இடையே'. 'தூரத்து உறவினர்கள்:துனைக் கண்டத்தின் கதை', 'நேருவுக்குப் பிறகு இந்தியா' மற்றும் 'ஸ்கூப்' போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=குல்தீப்_நய்யார்&oldid=1359737" இருந்து மீள்விக்கப்பட்டது