ஏ. ஆர். ரகுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அ. இர. ரகுமான்

பின்னணித் தகவல்கள்
இயற் பெயர் ஏ.சே.திலீப்குமார்
பிறப்பு சனவரி 6, 1966 (1966-01-06) (அகவை 46)
பிறப்பிடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வகை(கள்) திரைப்பட, மேடை இசை
தொழில்(கள்) இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், இசை இயக்குனர், பாடகர், இசைக்கருவி இசைப்பவர், நிரலாக்கர்
இசைக்கருவிகள் Electronic keyboards, vocals, கிட்டார், பியானோ, ஆர்மோனியம், percussion, ஏனைய
Associated acts சூப்பர்ஹெவி
வலைத்தளம் அதிகாரபூர்வ இணையத் தளம்

அ. இர. ரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: சனவரி 6, 1966), புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரே. 2010-ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது இவருக்கு அளிக்கப்பட்டது.

இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார் இசைப்புயல் ரஹ்மான்.

81 வது,2009 பிரமாண்டமான ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே உச்சரித்தார்[1].

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

ரகுமான் ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். இசையுலகப் பயணம் ஆரம்பித்தது 1985 இல். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார்.அதன் பின் குடும்மத்தில் வருமானம் இல்லாதனிலையில் தன் தந்தயின் இசைகருவிகலை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில்கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்று கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.

இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, மின் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனயாக அமைந்தது. படத்தின் பாடல்கள் அனத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கி தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.

முதல் படம் ஜப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவ தொடங்கியது. 2005 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங் ஸடுடியோவாக உள்ளது.

[தொகு] படைப்புகள்

[தொகு] திரைப்பட இசையமைப்புகள்

ஆண்டு தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் விருதுகள்
1992 ரோஜா ரோஜா ரோஜா "சிறந்த இசையமைப்பாளர் - தேசிய விருது, பிலிம்பேர்"
1993 ஜென்டில்மேன் ஜென்டில்மேன் தி ஜென்டில்மேன் "சிறந்த இசையமைப்பாளர் - தமிழ்நாடு மாநில விருது, பிலிம்பேர்"
கிழக்குச்சீமையிலே
புதிய முகம்
திருடா திருடா டொங்கா டொங்கா ச்சோர் ச்சோர்
உழவன்
1994 டூயட்
காதலன் ஹம்ஸே ஹே முக்காப்லா "சிறந்த இசையமைப்பாளர் - தமிழ்நாடு மாநில விருது, பிலிம்பேர்"
கருத்தம்மா
மே மாதம்
புதிய மன்னர்கள்
வண்டிச்சோலை சின்னராசு
பவித்ரா
சூப்பர் போலீஸ்
கேங் மாஸ்டர்
1995 பம்பாய் பம்பாய் பம்பாய்
இந்திரா
முத்து
ரங்கீலா ரங்கீலா
1996 இந்தியன் பாரதீயடு ஹிந்துஸ்தானி
காதல் தேசம் பிரேம தேசம் துனியா தில்வாலோன் கீ
லவ் பேர்ட்ஸ் ஃபயர்
மிஸ்டர் ரோமியோ
1997 இருவர்
மின்சார கனவு மெருப்பு கலலு சப்னே "சிறந்த இசையமைப்பாளர் - தேசிய, தமிழ்நாடு மாநில மற்றும் பிலிம்பேர் விருதுகள்"
ரட்சகன் ரக்ஷடு
தவுட்
1998 ஜீன்ஸ் ஜீன்ஸ் ஜீன்ஸ்
உயிரே ஹிருதயாஞ்சலி தில் சே
தோலி சஜா கே ரக்ஹ்னா
கபி நா கபி
1999 முதல்வன் ஒக்கே ஓக்கடு நாயக்
தாஜ் மஹால்
சங்கமம்
காதலர் தினம் பிரேமிகுலு ரோஜு
ஜோடி
தாளம் தாள்
என் சுவாசக்காற்றே
படையப்பா
1947 எர்த்
தக்ஷக்
புக்கார்
2000 அலைபாயுதே சகி சாத்தியா
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ப்ரியலு பிலிச்சிந்தி
ரிதம் ரிதம்
தெனாலி தெனாலி
தில் ஹே தில் மே
2001 ஸ்டார்
பார்த்தாலே பரவசம் பரவசம்
அல்லி அர்ஜூனா
சுபைதா
ஒன் 2 கா 4
லவ் யூ ஹமேஷா
லகான்
2002 கன்னத்தில் முத்தமிட்டால் அம்ருதா
பாபா
காதல் வைரஸ்
தி லெஜன்ட் ஆஃப் பகத் சிங்
சாத்தியா
2003 உதயா
பரசுராம்
பாய்ஸ் பாய்ஸ்
வாரியர்ஸ் ஆப் ஹெவென் அண்ட் எர்த்
எனக்கு 20 உனக்கு 18 நீ மனசு நாக்கு தெலுசு
கண்களால் கைது செய்
தெஹ்ஜீப்
2004 ஆய்த எழுத்து யுவா யுவா
நியூ நானி
தேசம் ஸ்வதேஸ்
லகீர்
மீனாக்சி - எ டேல் ஆஃப் 3 சிட்டீஸ்
தில் நே ஜிஸே அப்னா கஹா
கிஸ்னா
2005 போஸ் - தி ஃபர்காட்டன் ஹீரோ
மங்கள் பாண்டே - தி ரைஸிங்
அ ஆ
வாட்டர்
2006 ரங் தே பசந்தி
சில்லுனு ஒரு காதல்
வரலாறு(God Father)
2007 குரு குரு குரு
ப்ரோவோக்டு
சிவாஜி
அழகிய தமிழ் மகன்
எலிசபெத்: தி கோல்டென் ஏஜ்
2008 ஜோதா அக்பர்
ஜானே து யா ஜானே நா
அடா : எ வே ஆப் லைப்
சக்கரகட்டி
யுவ்ராஜ்
கஜினி
ஸ்லம் டாக் மில்லியனியர்
2009 டில்லி 6
ப்ளூ
பாசேஜ்
கபுள்ஸ் ரிட்ரீட்
2010 விண்ணைத்தாண்டி வருவாயா யே மாய சேசாவே விண்ணைத்தாண்டி வருவாயா ஃஇன்டி றெமகெ
எந்திரன் ரோபோ ரோபோ
ஜ்ஹூதா ஹீ சஹி
128 ஹவர்ஸ் கோல்டன் க்லோபுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
கொம்மாரம் புலி
  • குறிப்பு: "ஆண்டு", பன்மொழி திரைப்படமாயின், எந்த மொழியில் அத்திரைப்படம் முதலில் வெளியானதோ, அந்த ஆண்டை குறிக்கும்.

பின் வரும் பிற மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்:

[தொகு] திரைப்பட அல்லாத இசையமைப்புகள்

  • Return of the Thief of Baghdad (2003)
  • தீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்)
  • செட் மீ ஃப்ரீ (1991)
  • வந்தே மாதரம் (1997)
  • ஜன கன மன (2000)
  • பாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்)
  • இக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி)
  • ராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து)

Tamilan

[தொகு] இவர் பெற்ற விருதுகள்

சென்னையில் தான் பெற்ற ஆஸ்கார் விருதுடன் ஏ. ஆர். ரகுமான்

2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.

மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ, ஆறு முறை தமிழக திரைப்பட விருது, 13 முறை பிலிம்பேர் விருது, 12 முறை பிலிம்பேர் சவுத் விருது, (9 முறை தொடர்ந்து பெற்றார்) ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது, ஆகியவற்றுடன் மிடில்செக்ஸ் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

சிகரமாக, இந்திய குடிமக்களுக்கான மூன்றாம் உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் இவருக்கு இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்பட்டது.

[தொகு] மேற்கோள்

  1. http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2009/February/230209.asp

At present GRAMEE AWARD-2010 jan to take at australia

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஆர்._ரகுமான்&oldid=1078605" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்