எந்திரன் (திரைப்படம்)
| எந்திரன் | |
| இயக்குனர் | சங்கர் |
|---|---|
| தயாரிப்பாளர் | கலாநிதி மாறன் |
| கதை | பாலகுமாரன் சுஜாதா சங்கர் |
| நடிப்பு | ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ராய் |
| இசையமைப்பு | ஏ. ஆர். ரகுமான் |
| ஒளிப்பதிவு | ரத்தினவேல் |
| விநியோகம் | சன் பிக்சர்ஸ் |
| வெளியீடு | |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ், இந்தி, தெலுங்கு |
| ஆக்கச்செலவு | |
| மொத்த வருவாய் | [1][2] |
எந்திரன் 2010ல் வெளியான ஒரு அறிபுனை தமிழ்த் திரைப்படமாகும். சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கின்றார்கள். இப்படத்துக்கு ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்திருக்கின்றார். 2010, அக்டோபர் 1 அன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. துபாய், சிட்னி உட்பட சில உலக நகரங்களில் செப்டம்பர் 30 இல் இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன.
பொருளடக்கம் |
[தொகு] தமிழ்ப் பெயர் சர்ச்சை
தமிழ்நாடு அரசு தமிழ்த் திரைப்படங்கள் தமிழில் பெயரிடப்பட்டால் வரிவிலக்கு வழங்குகிறது. ரோபோ என்பது Robot என்ற ஆங்கிலச் சொல்லை அப்படியே எடுத்தாள்வதாகும். தமிழில் ரோபோ என்பதற்கு தானியங்கி என்ற பெயர் வழங்குகிறது. முன்னர் ரோபோ என்று பெயரிடப்பட்டு, பின்னர் எந்திரன் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.(இப்படம் முதன் முதலில் தயாரிக்க திட்டமிட்டது அய்ங்கரன் இண்டர்னேசனல் பின்பு பட்ஜெட் அதிகம் என்பதால் சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டது
[தொகு] ஏனைய மொழிகளில்
எந்திரன் திரைப்படம் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. அத்துடன் மேலைத்தேய நாடுகளில் ஆங்கில உப தலைப்புகளுடன் வெளியிட எச்.பி.ஓ நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது [3].
[தொகு] இசை வெளியீடு
31 சூலை, 2010 அன்று மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில் எந்திரன் இசை வெளியீட்டுவிழா நடைபெற்றது. இந்த திரைப்பட இசையை ஏழு கோடி இந்திய ரூபாய்க்கு திங் என்ற நிறுவனம் வாங்கிக்கொண்டது[4].
இசை வெளியிட்டு முதலாவது வாரத்தில் ஐடியூன்சில் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் இந்த திரைப்படப்பாடல்கள் முதல் இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதாவது அதிகமாகப் பதிவிறக்கப்பபட்ட பாடலாக இருந்தது. ஒரு தமிழ் திரைப்படப்பாடல் உலக அளவில் இவ்வாறு முதல் இடம் பிடித்தமை இதுவே முதற் தடவையாகும். [5][6]
[தொகு] வரவேற்பு
- உலகம் முழுதும் பெரிதும் எதிர்பார்கப்பட்ட இந்த எந்திரன் திரைப்படமானது அதிக வசூல் பெற்று தமிழ் திரைபடங்களில் தசாவதாரத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவு வசூல் அடைந்த திரைப்படம் என்னும் பெருமையைப் பெற்றது.
- இந்தியில் தோல்வியை தழுவினாலும், தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த படமானது உலகம் முழுதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.
- தமிழில் வெளியான முதல் அறிபுனை திரைப்படம் என்னும் பெயரும் பெற்றுள்ளது.
- ஜூலை 30 ஆம் தேதி,மிகவும் பிரபலமான தேடுதல் இணையதளமான கூகிளில்(Google) எந்திரன் திரைப்பட பாடல் வெளியீட்டை முன்னிட்டு “21-ஆவது அதிகம் தேடப்படவைகளுள் ஒன்று” என்பது குறிப்பிடத்தக்கது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Enthiran gross Rs.375 crore - Sun Pictures Report
- ↑ "Rajinikanth adds 30% to Kalanithi Maran's Sun TV Network revenue". The Economic Times.
- ↑ "‘Endhiran’ audio on July 31 - Tamil Movie News". IndiaGlitz. பார்த்த நாள் 2011-09-28.
- ↑ திங் நிறுவனம் இசை உரிமையை வாங்கியது (ஆங்கிலத்தில்)
- ↑ "‘Endhiran’ tops Apple list - Tamil Movie News". IndiaGlitz. பார்த்த நாள் 2011-09-28.
- ↑ Endhiran topped in the US iTunes chart
[தொகு] வெளி இணைப்புகள்
- [வலைத்தளம்]