ரசினிகாந்து (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரஜினிகாந்த் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரஜினிகாந்த்
Rajinikanth 2010 - still 113555 crop.jpg
31 ஜூலை 2010
இயற் பெயர் சிவாசி ராவ் கைக்வாட்
பிறப்பு திசம்பர் 12, 1950 (1950-12-12) (அகவை 61)
இந்தியாவின் கொடி கர்நாடகா , இந்தியா
நடிப்புக் காலம் 1975-தற்போது
துணைவர் லதா ரஜினிகாந்த்
இணையத்தளம் http://www.rajinikanth.com/

ரஜினிகாந்த் என்று அனைவராலும் அறியப்படும் சிவாஜி ராவ் கைக்வாட் (பிறப்பு: டிசம்பர் 12, 1950), மராட்டியில்: रजनीकांत/शिवाजीराव गायकवाड, சிவாஜீராவ் காயகவாட்) ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர்.

பொருளடக்கம்

[தொகு] இளமை

ரஜினிகாந்த், டிசம்பர் 12 1950 அன்று இந்தியாவின் கர்நாடகத்தில் ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தார். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரசினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.

[தொகு] திரைப்படங்களில்

நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த ரசினிகாந்து, ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராசா, முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை ரசினிகாந்து நிரூபித்தார். ரசினிகாந்து நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா. இப்படம் இந்து சமயப் புனிதரான ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்ற மகானின் வாழ்க்கை பற்றியது.

1980களில் ரசினிகாந்து நடித்து வெளிவந்த வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை, பாட்சா, படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பாபா (திரைப்படம்) சில இடங்களில் வெற்றி பெறவில்லை. எனினும், அவர் நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகியும் 2007 ஆம் ஆண்டு வெளி வந்த சிவாஜி உம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இவருடைய நண்பரும், மற்றொரு சிறந்த நடிகருமான கமலஹாசன் பெரும்பாலும் அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடிக்கையில் ரசினிகாந்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாகவே உள்ளன. தமிழ் மொழியிலும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி ஆகிய மொழிகளிலும் 170 திரைப்படங்களில் ரசினிகாந்து நடித்துள்ளார்.

[தொகு] ரசிகர்களிடம் வரவேற்பு

ரசினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. ரசினிகாந்துக்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

[தொகு] அரசியல் தொடர்பு

1990களில் ரசினிகாந்து நடித்த சில திரைப்படங்களின் வசனங்களிலும் பாடல்களிலும் அரசியல் நெடி சற்று இருந்தது. 1996 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் கருத்து கூறியது அக்கட்சி தோற்றதன் காரணங்களுள் ஒன்றாக கூறப்படுகிறது. எனினும், இக்காரணி தேர்தல் புள்ளியியலாளர்களால் உறுதியிட்டுக் கூறப்படவில்லை. அடுத்தடுத்த தேர்தல்களில், ரசினிகாந்து எக்கட்சிக்கும் வாக்களியுங்கள் என்றோ வாக்களிக்க வேண்டாம் என்றோ வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தன் ரசிகர்களையோ பொது மக்களையோ கேட்டுக்கொள்ளவில்லை.2004 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ச.க தலைமையிலான கூட்டணிக்கு தான் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார். இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும், ரசினிகாந்து அரசியலில் ஒட்டாமலே இருந்து வருகிறார். ரசினி 2008 நவம்பர் 3 அன்று ரசிகர்களை சந்தித்து பேசினார். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரின் அரசியல் வருகை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது, எந்திரன் படத்திற்கு பிறகு முடிவு அறிவிப்பதாகக் கூறினார்.

[தொகு] குடும்பம்

16 பிப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். பின்னர் இருவரும் ஐசுவர்யா, சௌந்தர்யா ஆகிய இரு மகள்களைப் பெற்றனர். இவருடைய மூத்த மகள் ஐசுவர்யா, 2004 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட நடிகரான தனுசை மணந்தார். செப்டம்பர் மூன்றாம் தேதி 2010 ஆம் ஆண்டு அன்று சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் அஸ்வின் ராம்குமார் என்ற தொழிலதிபரை மணந்தார்.

[தொகு] நடித்துள்ள திரைப்படங்கள்

Year Title Role(s) Language Awards
1975 அபூர்வ ராகங்கள் அபஸ்வரம் தமிழ்
1976 மூன்று முடிச்சு தமிழ்
1977 16 வயதினிலே பரட்டை தமிழ்
புவனா ஒரு கேள்விக்குறி அரவிந்த் தமிழ்
1978 முள்ளும் மலரும் காளி தமிழ் தமிழக அரச திரைப்பட விருதுகள்
1979 நினைத்தாலே இனிக்கும் தீபக் தமிழ்
ஆறிலிருந்து அறுபது வரை சந்தானம் தமிழ்
1980 பில்லா பில்லா,
ராஜா
தமிழ்
முரட்டு காளை காளையன் தமிழ்
1981 தில்லு முல்லு இந்திரன் /
சந்திரன்
தமிழ்
1982 மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன்,
அருண்,
ஜான்
தமிழ் தமிழக அரச திரைப்பட விருதுகள்
1984 நல்லவனுக்கு நல்லவன் மாணிக்கம் தமிழ் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
1985 ஸ்ரீ ராகவேந்திரா ராகவேந்திர சுவாமி தமிழ்
1991 தளபதி சூர்யா தமிழ்
1992 அண்ணாமலை அண்ணாமலை தமிழ்
1993 எஜமான் வாணவராயன் தமிழ்
1995 பாட்சா மாணிக்கம் தமிழ்
முத்து முத்து,
எஜமான்
தமிழ் தமிழக அரச திரைப்பட விருதுகள்
1997 அருணாசலம் அருணாசலம் ,
வேதாசலம்
தமிழ்
1999 படையப்பா ஆறுபடையப்பன் தமிழ் தமிழக அரச திரைப்பட விருதுகள்
2005 சந்திரமுகி டாக்டர். சரவணன் ,
கிங் வேட்டையன்
தமிழ் தமிழக அரச திரைப்பட விருதுகள்
2007 சிவாஜி சிவாஜி ஆறுமுகம் தமிழ் தமிழக அரச திரைப்பட விருதுகள்
Nominated—சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
2010 எந்திரன் டாக்டர். வசீகரன்,
சிட்டி
தமிழ் Nominated—சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
2011 கோச்சடையான் (படப்பிடிப்பில் உள்ளது) தமிழ்

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்