காகிதம்
கடதாசி (பிறச்சொற்கள் தாள், கடுதாசி, ஆங்கிலம் Paper) என்பது, அதன் மேல் எழுதுவதற்கும், அச்சிடுவதற்கும்; பொதி சுற்றுவதற்கும் பயன்படுகின்ற மெல்லிய பொருள் ஆகும். இது மரம், புற்கள், வைக்கோல் முதலியவற்றிலிருந்து பெறப்படும் செலுலோசுக் கூழ் போன்ற ஈரலிப்பான நார்ப் பொருட்களை அழுத்தித் தாள்களாக ஆக்குவதன் மூலம் செய்யப்படுகிறது. அறியப்பட்ட மிக முந்திய வகைக் கடதாசி கிமு 3500 ஆம் ஆண்டளவில் எகிப்தில் பயன்பட்டுள்ளது. இது பப்பிரஸ் தாவரத்தில் இருந்து செய்யப்பட்டது. தற்போது நாம் பயன்படுத்தும் கடதாசி கிபி இரண்டாம் நூற்றாண்டளவில் சீனாவில் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னரே சீனாவில் கடதாசி பயன்பட்டிருக்கக் கூடும் என்பதற்கான சில சான்றுகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பொருளடக்கம் |
பயன்பாடு [தொகு]
சீனாவில் கடதாசி பயன்படுத்தியது போலவே, ஒவ்வொரு நாட்டவரும் ஒவ்வொரு முறையைப் பயன்படுத்தியுள்ளனர். சீனர்கள் முதலில் மூஙகில் பட்டைகளில் தான் எழுதினர்.சுமெரியர்கள் ஈரமான களிமண் கொண்டு பலகைகள் உருவாக்கி அதில் எழுதி வந்துள்ளனர். எகிப்தியர்கள் பப்பிரைஸ் என்ற நாணல் புல்லில் எழுதினார்கள்.தமிழர்கள் பனைஓலையைப் பக்குவம் செய்து அதில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்துள்ளனர். தமிழ் இலக்கியஙகள் யாவும் இவ்வாறு பனைஓலையில் எழுதப்பட்டவையே. பின்னர் பட்டுத் துணிகளில் வண்ணக்குழம்பினைப் பயன்படுத்தி தமிழர்கள் எழுதி வந்துள்ளனர். என்றும் அழியாத எழுத்துகள் வேண்டும் என்பதற்காக கற்களிலும் எழுத்துகளை கல்வெட்டுகளில் செதுக்கி வைத்தனர். ஐரோப்பியர்கள் ஆட்டின் தோல் அல்லது கன்றின் தோல் இவற்றில் எழுதினார்கள்.
தோற்றம் [தொகு]
சீனாவைச் சேர்ந்த "சாய்லுன்" என்பவர் தான் முதன்முதலில் தாள்களை உருவாக்கினார்.கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட காகிதம் கி.பி எட்டாம் நூற்றாண்டு வரை வேறு நாட்டவரால் அறியப்படவில்லை.. கி.பி எட்டாம் நூற்றாண்டில் அரேபியர்கள் சீனாவின் மீது படையெடுத்து சென்றனர். அப்போது தாள்களை உருவாக்கத் தெரிந்த சிலரை அடிமைகளாக்கி தங்களுடன் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்தே அரேபியர்கள் தாள்கள் உருவாக்கும் கலையைக் கற்றனர். அரேபியர்களிடமிருந்து ஐரோப்பியர் கற்று உலகெங்கும் தாள் உருவாக்கும் கலையை பரப்பினர். கடதாசியின் பயன்பாடு, சீனாவில் இருந்து இஸ்லாமிய உலகத்தினூடாக ஐரோப்பாவுக்குப் பரவியது. அங்கே 12 ஆம் நூற்றாண்டில் கடதாசி உற்பத்தி தொடங்கியது
மூலப் பொருட்கள் [தொகு]
தொடக்கத்தில் மூங்கில் போன்ற மரஙகளை சிறுசிறு துண்டுகளாக்கி அதனை நன்றாக அரைத்து கூழாக்கினர். இதுவே செல்லுலோஸ் எனப்படும் "காகிதக் கூழ்" ஆகும் இந்த கூழினை நன்கு காய்ச்சி, அதில் உள்ள நீரை வடித்து கனமான தகடு போன்ற பொருளினால் அழுத்தி தாள்களை உருவாக்கினார்கள்.இவ்வாறு தான் காகிதம் உருவானது.
- ஊசியிலை மரங்கள், மூங்கில், யூகலிப்டஸ், பருத்தி, சணல் கழிவு, கந்தை துணிகள், நார்கள், புற்கள், கரும்புச்சக்கைகள் போன்றவை.
- தற்காலத்தில் மரத்துண்டுகளுக்குப் பதிலாக இரசாயன முறையில் அமிலஙகளை சேர்த்து வேகவைத்து காகிதக்கூழ் தயாரிக்கின்றனர்.
- இயந்திரமயமாக்கப்பட்ட கடதாசி உற்பத்தி குறிப்பிடத்தக்க பண்பாட்டு மாற்றங்களை உலகம் முழுவதும் ஏற்படுத்தியது. எழுதுவதும் அச்சிடுவதும் மிகவும் எளிதயிற்று.
பல்வேறு பெயர்கள் [தொகு]
எகிப்து நாட்டினர் முதன்முதலில் பப்ரைஸ் தாளில் எழுதியதால் "பேப்பர்" என்று அழைக்கின்றனர்.அரேபியர் "காகத்" என்றனர். தமிழர்கள் காகிதம் எனவும் தாள் எனவும் அழைக்கின்றனர். போர்த்துகீசியர்கள் கடுதாசி என்று அழைக்கின்றனர்.
இது முதன் முறையாகக் கடிதங்கள், செய்தித்தாள்கள், புத்தகங்கள் என்பவற்றின் மூலம் மலிவான தகவல் பரிமாற்றங்களுக்கு வழிவகுத்தது. அதுமட்டும் அல்லாமல் செலாவணியாக நாம் பயன்படுத்தும் பணம் உருவாகவும் மூல காரணமாயிற்று.
மேற்கோள் [தொகு]
ஐந்தாம் வகுப்பு, தமிழ்ப்பாடநூல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன வெளியீடு (சமச்சீர் கல்விக்கு முந்தையது)