ஹாரிஸ் ஜயராஜ்
| ஹாரிஸ் ஜயராஜ் | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| இயற் பெயர் | ஹாரிஸ் ஜயராஜ் |
| பிறப்பு | சனவரி 8, 1975 |
| பிறப்பிடம் | கோடம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
| இசைக்கருவிகள் | கிட்டார், விசைப்பலகை, பியானோ, தோல் இசைக்கருவிகள் |
| இசைத்துறையில் | 2001–நடப்பு |
ஹாரிஸ் ஜயராஜ் (பிறப்பு 8 சனவரி 1975, திருநெல்வேலி) தமிழ் திரைப்படத்துறையில் உள்ள ஓர் இசையமைப்பாளர். பல தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் பாடல்களும் அமைத்துள்ளார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார்.
பொருளடக்கம் |
[தொகு] இளமை
சென்னையின் கிறித்துவ நாடார் குடும்பத்தில் பிறந்தவர் ஹாரிஸ் ஜயராஜ்.[1] அவரது தந்தை எஸ். எம். ஜயராஜ் திரைப்படத்துறையில் கிட்டார் வாசிப்பவராக இருந்து பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்தவர். மலையாள இசையமைப்பாளர் சியாமிடம் துணைவராகப் பணியாற்றிய அவர், தமது மகனை பெரும் பாடகராகக் காண ஆவல் கொண்டார். ஆனால்,சென்னை கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் பயின்று வந்த ஹாரிசுக்கு இசையமைப்பில் பெரும் ஆர்வம் இருந்தது. தமது குரல் பாடகராக ஒத்துழைக்கவில்லை என்று கூறும் ஹாரிஸ் ஹான்ஸ் சிம்மரின் படைப்புகளில் மனதை பறிகொடுத்தார்.
[தொகு] பணிவாழ்வு
2001 ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த ஹாரிஸ் ஜெயராஜ் தன் முதல் படமான 'மின்னலே' மூலமே மிகப் பெரிய தடம் பதித்தவர்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ A special birthday for Harris, 8 January 2008