சின்மயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சின்மயி ஸ்ரீபதா

பின்னணி விவரம்
பிறப்பு பெயர் சின்மயி ஸ்ரீபதா
வகை பின்னணி பாடகி, கர்னாடக இசை
தொழில்கள் பாடகி
வானொலி தொகுப்பாளர்
மொழிபெயர்ப்பாளர்
வலைத்தள பயனர்
தொலைகாட்சி தொகுப்பாளர்
ஒலிச்சேர்க்கை
இசைத்துறையில் 2002-தற்பொழுது வரை
இணையத்தளம் http://www.chinmayionline.com/

சின்மயி ஸ்ரீபதா (பிறப்பு: செப்டம்பர் 10, 1984) இந்தியாவைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பின்னணி பாடகி ஆவார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடலே இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும். பின்பு எனக்கு உனக்கு, பாய்ஸ், அறிந்தும் அறியாமலும் மற்றும் சண்டைகோழி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளார்.

சின்மயி, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் போட்டியை தொகுத்து வழங்கினார். மேலும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். சென்னையில் ஒளிபரப்பாகும் ஆஹா பண்பலையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 'ஆஹா காப்பி க்ளப்' எனும் காலை ஏழு மணி முதல் பத்து மணி வரை நடைப்பெறும் வானொலி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாகவும் இவர் திகழ்கிறார் . இவர் திரைப்படத்தில் பின்னணி குரல் தருபவராகவும் இருக்கிறார். சில்லுனு ஒரு காதல்படத்தில் பூமிகா சாவ்லாவிற்கு, உன்னாலே உன்னாலே படத்தில் தனிஷா முகெர்ஜிக்கு, சத்தம் போடாதே படத்தில் பத்மப்ரியாவிற்கு, தாம் தூம் படத்தில் கங்கனா ரனாத்திற்கு, ஜெயம்கொண்டான் படத்தில் லேகா வாஷிங்டனிற்கு, சக்கரகட்டி படத்தில் வேதிகாவிற்கு மற்றும் வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா ரெட்டியிற்கு என பல திரைப்படங்களின் பாத்திரங்களுக்கு இவர் பின்னணி குரல் தந்துள்ளார்,

இவரின் முதல் பாடலே தமிழ்த் திரைப்பட உலகை ஆச்சிரியத்தில் ஆற்றியது. ஏ. ஆர். ரகுமான் பிரமாதமாக இசையமைக்க, திரையியக்குனர் மணிரத்னம் அழகாக இப்பாடலை திரைக்கு கொண்டுவர, சிம்ரன் மற்றும் கீர்த்தனாவின் நடிப்பில் படத்தில் இடம்பெற்ற இவரது முதல் பாடலே மாப்பெரும் வெற்றிப்பாடலாக அமைந்தது. சின்மயி, ஏ. ஆர். ரகுமானின் இசையமைப்பிலேயே நிறைய பாடல்களைப் பாடியுள்ளார். குரு படத்தின் தேரே பினா மற்றும் மையா மையா பாடல்கள் மூலம் பாலிவுட் உலகையும் அசத்தினார்.

[தொகு] சின்மயி பாடிய பாடல்கள்

வருடம் பாடல் திரைப்படம் இசையமைப்பாளர்
2002 ஒரு தெய்வம் தந்த பூவே கன்னத்தில் முத்தமிட்டால் ஏ.ஆர்.ரஹ்மான்
ஒரு தடவை சொல்வாயா வசீகரா
கிறுக்கா கிறுக்கா விசில்
உயிர் பிரிந்தாலும் சேனா
இதயமே நம்ம ஊரு
பூந்தேனா ஈரநிலம்
2003 மைனாவே மைனாவே தித்திக்குதே
பூ பூ பூங்குருவி தத்தி தாவுது மனசு
என்ன இது நல தமயந்தி
ப்ளீஸ் சார் பாய்ஸ் ஏ.ஆர்.ரஹ்மான்
கண்ணா அன்பே உன் வசம்
பிரிவெல்லாம் பிரிவல்ல சூரி
பூவே முதல் பூவே காதல் கிறுக்கன்
சந்திப்போமா எனக்கு 20 உனக்கு 18 ஏ.ஆர்.ரஹ்மான்
ஒரு நண்பன் இருந்தால் எனக்கு 20 உனக்கு 18 ஏ.ஆர்.ரஹ்மான்
என் உயிர் தோழியே கண்களால் கைது செய் ஏ.ஆர்.ரஹ்மான்
2004 புது காதல் காலமிது புதுகோட்டையிலிருந்து சரவணன் யுவன் சங்கர் ராஜா
என்னை தீண்டிவிட்டாய் குத்து ஸ்ரீகாந்த் தேவா
நீ தானே என் மேல ஜனனம்
If you wanna come along நியூ ஏ.ஆர்.ரஹ்மான்
ஒப்பனக்கார வீதியிலே கிரி
எங்கு பிறந்தது விஷ்வா துளசி
காதலிக்கும் ஆசையில்லை செல்லமே ஹாரிஸ் ஜெயராஜ்
2005 நூதனா கற்க கசடற
சில் சில் அறிந்தும் அறியாமலும் யுவன் சங்கர் ராஜா

[தொகு] பின்னணி குரல் கொடுத்த படங்கள்

வருடம் திரைப்படம் யாருக்கு பின்னணி குரல் கொடுத்தார் குறிப்பு
2006 சில்லுனு ஒரு காதல் பூமிகா சாவ்லா
2007 உன்னாலே உன்னாலே தனிஷா முகெர்ஜி
சத்தம் போடாதே பத்மப்ரியா
2008 ஜெயம்கொண்டான் லேகா வாஷிங்டன்
தாம் தூம் கங்கனா ரனாத்
சக்கரகட்டி வேதிகா குமார்
வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி
2009 தநா-07 ஏஎள் 4777 மீனாட்சி
யாவரும் நலம் நீது சந்திரா
மோதி விளையாடு காஜல் அகர்வால்
கண்டேன் காதலை தமன்னா
2010 அசல் சமீரா ரெட்டி
ராக்தா சரித்ரா ராதிகா அப்தே
தீராத விளையாட்டுப் பிள்ளை நீது சந்திரா
விண்ணைத்தாண்டி வருவாயா திரிஷா கிருஷ்ணன்
ஏ மாயா சேசவா சமன்தா ருத் பிரபு
சுறா தமன்னா
மன்மத பாணம் - (தெலுங்கு) திரிஷா கிருஷ்ணன்
2011 கோ கார்த்திகா நாயர்
நடுநிசி நாய்கள் சமீரா ரெட்டி
வந்தான் வென்றான் டாப்ஸே பண்ணு

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சின்மயி&oldid=871089" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்