ஏழாம் அறிவு (திரைப்படம்)
| 7ஆம் அறிவு | |
|---|---|
சூர்யா மேலே ஜானி ட்ரை ஙுயென் (கீழே) |
|
| இயக்குனர் | ஏ. ஆர். முருகதாஸ் |
| தயாரிப்பாளர் | உதயநிதி ஸ்டாலின் |
| கதை | ஏ. ஆர். முருகதாஸ் |
| நடிப்பு | சூர்யா சுருதி ஹாசன் ஜானி ட்ரை ஙுயென் |
| இசையமைப்பு | ஹாரிஸ் ஜயராஜ் |
| ஒளிப்பதிவு | ரவி கே. சந்திரன் |
| படத்தொகுப்பு | அண்டனி |
| கலையகம் | ரெட் ஜயன்ட் மூவிஸ் |
| விநியோகம் | ரெட் ஜயன்ட் மூவிஸ் |
| வெளியீடு | அக்டோபர் 26, 2011[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| மொத்த வருவாய் | |
ஏழாம் அறிவு சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2011 இல் வெளியான ஒரு அறிவியல் புனைவுத் தமிழ்த் திரைப்படம்.
பொருளடக்கம் |
நடிகர்கள் [தொகு]
- சூர்யா
- ஜானி ட்ரை ஙுயென்
- சுருதி ஹாசன்
- அபிநயா
- அவினாஷ்
- கின்னஸ் பக்ரு
- அஸ்வின்
- தன்யா
கதை [தொகு]
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, காஞ்சிரத்தில் வாழ்ந்த போதி தர்மர் (சூர்யா), அரசியல் நெருக்கடிகளால் சீனாவுக்கு நடந்தே சென்று சேர்கிறார். அங்கே அவர் மருத்துவம் பார்க்கிறார். சீனர்களுக்குக் களரியைக் கற்றுக் கொடுக்கிறார். புத்தமதத்தின் புதிய பிரிவைத் தோற்றுவிக்கிறார்.
அவரது பரம்பரையில் வந்த சாகசக் கலைஞரான அரவிந்தைத் (சூர்யா) தேடிக் கண்டு பிடித்து, அறுவை சிகிச்சை மூலம் அவரது டி.என்.ஏ.வை தூண்டி விடுகிறார்கள். இதனால் அவருக்கு போதி தர்மரின் திறமைகளான போர்திறம், வீரம், தற்காப்பு பயிற்சி போன்றவை அவருக்கு நினைவிற்கு வருகின்றன.
சீன உளவுத்துறையால் ஆபரேஷன் ரெட் மூலம் இந்தியாவில் நோய்க் கிருமிகளை பரவச்செய்ய அனுப்பபடும் வில்லன் டொங் லீ (ஜானி ட்ரை ஙுயென்), நோக்கு வர்மம் என்ற ஹிப்னாடிஸம் மூலம் தன் வழியில் குறுக்கிடும் ஆட்களை வசியப்படுத்தி கொண்டு ஆதாரம் இல்லாமல் செய்கிறான். அதை முறியடிக்க சூர்யாவிற்கு உதவுகிறார் இளம் விஞ்ஞானி சுபா (ஸ்ருதி ஹாசன்).
விவரங்கள் [தொகு]
- சூர்யா இப்படத்தில் போதி தருமன்(புத்த துறவி)[2], வட்டரங்கு கலைஞர் என 2 கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.[3][4]
- இப்படத்தில் ஒரு 10 நிமிட காட்சிக்காக
10 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது.[5] - டோனி ஜாவின் டாம் யம் கூங் திரைப்படத்தில் ஜானி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த ஜானி ட்ரை ஙுயென் இந்த படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார்.[6]
- கன்னட நடிகர் அவினாஷ் சூரியாவின் தந்தை வேடத்தில் நடித்திருக்கிறார்.[7]
- இப்படத்தில் 1,000 நடனக்கலைஞர்கள் கலந்து கொண்ட பாடல் காட்சி இடம் பெருகிறது.[8]
இசை [தொகு]
| ஹாரிஸ் ஜயராஜ் இசையில் பாடல்கள் | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| எண் | தலைப்பு | பாடலாசிரியர் | பாடகர்கள் | நீளம் | |||||
| 1. | "ஓ ரிங்கா ரிங்கா" | பா.விஜய் | ரோசன், ஜான், தயால், சுசித்ரா | 5:34 | |||||
| 2. | "முன் அந்தி" | நா. முத்துக்குமார் | கார்த்திக், மேகா | 6:14 | |||||
| 3. | "ஏலேலமா" | நா. முத்துக்குமார் | விஜய் பிரகாஷ், கார்த்திக், சாலினி, சுருதி ஹாசன் | 5:21 | |||||
| 4. | "யம்மா யம்மா" | கபிலன் | பால சுப்ரமணியம், சுவேதா மேனன் | 6:06 | |||||
| 5. | "இன்னும் என்ன தோழா" | பா. விஜய் | பல்ராம், நரேஷ், சுஜித் | 4:58 | |||||
| 6. | "ரைஸ் ஆஃப் டெமோ (The Rise of Damo) " (சீன மொழி பாடல்) |
மதன் கார்க்கி | ஹவோ வாங்[9] | 3:16 | |||||
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Surya’s 7 Aam Arivu satellite rights sold to Sun TV". CineBuzz. 24 August 2011. http://cinebuzz.in/suryas-7-aam-arivu-satellite-rights-sold-to-sun-tv. Retrieved 24 August 2011.
- ↑ Surya turns the transmitter of Zen, 2011, http://entertainment.oneindia.in/tamil/news/2011/surya-transmitter-zen-aum-arivu-140911.html
- ↑ Suriya joins the circus! - Rediff.com Movies
- ↑ Is Suriya playing a triple role in 7Aum Arivu? | TamilWire.com
- ↑ "7ம் அறிவு படத்தில் 10 நிமிட காட்சிக்காக 10 கோடி செலவு-முருகதாஸ் தகவல்". cineikons.com (2011). பார்த்த நாள் 11 September 2011.
- ↑ IndiaGlitz - Expectations running high for ‘7am Arivu’ - Tamil Movie News
- ↑ IndiaGlitz - Avinash Is Suriya Father - Tamil Movie News
- ↑ ‘ezham Arivu’ And 1000 Dancers - Ezham Arivu - Suriya - Harris Jayaraj - A R Murugdoss - Tamil Movie News - Behindwoods.com
- ↑ 7am Arivu With A Chinese Track, IndiaGlitz, 16 May 2011, http://www.indiaglitz.com/channels/tamil/article/66743.html, retrieved 9 August 2011