பரத்வாஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரத்வாஜ்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு7 மார்ச்சு 1960 (1960-03-07) (அகவை 64)[1]
இசை வடிவங்கள்திரையிசை
தொழில்(கள்)திரைப்பட இசையமைப்பாளர், பாடகர்
இசைத்துறையில்1998–தற்போதுவரை

பரத்வாஜ் தமிழ் திரைப்படத்துறையில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிருக்கிறார். 2008-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். இவர் தனது 17 ஆவது வயதிலேயே தூர்தர்ஷன் மற்றும் அனைத்திந்திய வானொலி நிலையத்தின் பல நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவர்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராவணசமுத்திரத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப் படிப்பையும் கல்லூரி படிப்பையும் தில்லியில் பயின்றார்.[2] இவரது தந்தை ஒரு அரசு அதிகாரி ஆவார்.[2]இந்துஸ்தானி இசை, கருநாடக இசை, மற்றும் மேற்கத்திய இசைகளை இவர் முறைப்படி தில்லியில் கற்றவர்.[2] பரத்வாஜ் இசையமைக்க வரும் முன்பாகவே அவர் சி.ஏ எனப்படும் பட்டயக் கணக்கறிஞர் தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.[2]

திருக்குறளுக்கு இசை[தொகு]

திருவள்ளுவரின் உலக பொதுமறையான 1330 திருக்குறளுக்கும் இசைவடிவம் கொடுத்து பாடல்களாக உருவாக்கியுள்ளார்.[3]

பாடல்கள்[தொகு]

சரணுடன் இணைந்து இசையமைத்த குறிப்பிடத்தக்க பாடல்கள்[தொகு]

மற்ற இயக்குனர்களுடன் இணைந்து இசையமைத்த குறிப்பிடத்தக்க பாடல்கள்[தொகு]

இசையமைத்த திரைப்படங்கள்[தொகு]

காதல் மன்னன் திரைப்படத்தில் அறிமுகமான பரத்வாஜ் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த அட்டகாசம் இவரது 25-வது திரைப்படமாகவும் இயக்குனர் சரணின் இயக்கத்தில் வெளிவந்த அசல் திரைப்படம் இவரது 50-வது திரைப்படமாகவும் அமைந்தது.[4]

ஆண்டு தமிழ் மற்ற மொழிகள் குறிப்புகள்
1998 காதல் மன்னன் முதல் திரைப்படம்
பூவேலி
1999 அமர்க்களம்
ரோஜாவனம்
2000 பார்த்தேன் ரசித்தேன்
2001 பாண்டவர் பூமி
பெண்கள்
2002 ரோஜாக்கூட்டம்
ஜெமினி சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
தமிழ்
தயா
ராஜ்ஜியம்
ஜங்ஷன்
ஐ லவ் யூ டா
2003 ஜே ஜே
காதல் டாட் காம்
காலாட்படை
அன்பே அன்பே
2004 வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
ட்ரீம்ஸ்
ஜனனம்
ஒரு முறை சொல்லிவிடு
ஆட்டோகிராப் சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
அட்டகாசம்
2005 ஐயா
பிரியசகி
குண்டக்க மண்டக்க
பிப்ரவரி 14
2006 இதயத் திருடன்
திருப்பதி
ஜாம்பவான்
உள்ள கடத்தல்
மை ஆட்டோகிராப் (கன்னடம்)
திருட்டுப் பயலே
வட்டாரம்
2007 பள்ளிக்கூடம்
ஒன்பது ரூபாய் நோட்டு
விகாரி (தெலுங்கு)
நம்பர்.73, சாந்தி நிவசா (கன்னடம்)
முனி
2008 வல்லமை தாராயோ
2009 நாளை நமதே
சொல்ல சொல்ல இனிக்கும்
காதலுக்கு மரணமில்லை திரைப்படம் வெளியாகவில்லை
அசல்[4]
2010 களவாடிய பொழுதுகள்
நந்தி
2014 அதிதி
அரண்மனை
அழகிய பாண்டிபுரம்
2016 ஆயிரத்தில் இருவர் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-30. பார்க்கப்பட்ட நாள் 2014-07-12.
  2. 2.0 2.1 2.2 2.3 Movie Buzz. "Bharadwaj". Sify.
  3. "திருக்குறளுக்கு இசை". http://m.dinamalar.com/cinema_detail.php?id=33622. 
  4. 4.0 4.1 "Saran confirms Bharadwaj for Asal". By Moviebuzz. 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-03-29.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரத்வாஜ்&oldid=3847656" இலிருந்து மீள்விக்கப்பட்டது