விஜய் (நடிகர்)
| ஜோசப் விஜய் | |
|---|---|
துப்பாக்கி படப்பிடிப்புத் தளத்தில் விஜய் |
|
| இயற் பெயர் | ஜோசப் விஜய் |
| பிறப்பு | சூன் 22, 1974 சென்னை தமிழ்நாடு இந்தியா |
| தொழில் | திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர், டான்ஸர் |
| நடிப்புக் காலம் | 1992-தற்போது |
| துணைவர் | சங்கீதா |
| பிள்ளைகள் | சஞ்சய், திவ்யா |
| குறிப்பிடத்தக்க படங்கள் | காதலுக்கு மரியாதை யில்''ஜீவானந்தம்' கில்லி யில்''சரவணவேலு' போக்கிரியில்''சத்தியமூர்த்தி' வில்லு' குருவி |
| இணையத்தளம் | http://www. vijaytheactor.com/ |
விஜய் (பிறப்பு: ஜூன் 22, 1974; இயற்பெயர்: ஜோசப் விஜய்) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்று அழைக்கிறார்கள்.
பொருளடக்கம் |
திரைப்படத்துறை [தொகு]
விஜய் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் கதாநாயகனாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
தற்பொழுது, விஜய்க்காக தளமதி ஆன்தம் என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள் .எங்கேயும் எப்போதும் படத்தில் பேருந்து காட்சிகளில், கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன், 2012 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்.[1]
வேறு துறை [தொகு]
இவர் விளம்பரப் படங்களிலும் நடிக்கிறார். 2002ல் கொக்கக் கோலா நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் இவர் கேட்ரீனா கய்ஃப் உடன் தோன்றினார்.ஆகஸ்ட் 2010 முதல் ஜோஸ் அலுக்காஸ் நகைக் கடையின் விளம்பரப் படங்களில் தோன்றி வருகின்றார்.2011 ல் டாடா டோகோமா நகர்பேசி விளம்பரப்படத்தில் நடித்தார்.[2][3]
அரசியல் [தொகு]
2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது.
இவர் நடித்த திரைப்படங்கள் [தொகு]
| ஆண்டு | படம் | பாத்திரம் | துணை நடிகர்/நடிகை | இயக்குனர் | குறிப்புகள் |
|---|---|---|---|---|---|
| 2013 | தலைவா | அமலா பால் | விஜய்(டைரக்டர்) | படப்பிடிப்பில் | |
| 2012 | ரவுடி ரதோர் | பிரபு தேவா | இந்தி திரைப்படத்தில் சிறப்புதோற்றம் | ||
| 2012 | துப்பாக்கி | ஜெகதீஸ் | காஜல் அகர்வால் | ஏ. ஆர். முருகதாஸ் | மாபெரும் வசூல் சாதனை |
| 2012 | நண்பன் | பஞ்சவன் பாரிவேந்தன் / பாரி / கொசக்சி பசபுகழ் | ஸ்ரீகாந்த்,ஜீவா,இலியானா,சத்யராஜ் | ஷங்கர் | திரீ இடியட்ஸ்(2009) இந்தி படத்தின் மீளுருவாக்கம்.[4] |
| 2011 | வேலாயுதம் | வேலு(எ)வேலாயுதம் | ஹன்சிகா மோட்வானி , ஜெனிலியா | மோ. ராஜா | ஆசாத்(2000) என்ற தெலுங்கு படத்தின் தழுவல்.[5] |
| 2011 | காவலன் | பூமிநாதன் | அசின், வடிவேல் | சித்திக் | 14வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா திரையிடப்பட்டது [6] |
| 2010 | சுறா | சுறா | தமன்னா | எஸ்.பி. ராஜ்குமார் | விஜயின் 50வது படம். |
| 2009 | வேட்டைக்காரன் | ரவி / பொலிஸ் ரவி | அனுஷ்கா | பாபு சிவன் | புலி வேட்டை என்னும் பெயரில் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது. |
| 2009 | வில்லு | புகழ் | நயன்தாரா | பிரபு தேவா | ஹிந்தியில் மொழி பெயர்க்கபட்டது |
| 2008 | பந்தயம் | விஜய் | எஸ்.ஏ. சந்திரசேகர் | சிறப்புத் தோற்றம் | |
| 2008 | குருவி | வெற்றிவேல் | திரிஷா, விவேக் | தரணி | உதயாநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸின் முதல் தயாரிப்பு. |
| 2007 | அழகிய தமிழ் மகன் | குரு / பிரசாத் | சிரேயா சரன், நமிதா | பரதன் | தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது. |
| 2007 | போக்கிரி | சத்தியமூர்த்தி / தமிழ் | அசின் | பிரபு தேவா | இதே பெயரில் 2006ல் வெளிவந்த தெலுங்கு படத்தின் மீளுருவாக்கம். |
| 2006 | ஆதி | ஆதி | திரிஷா | ரமணா | |
| 2005 | சிவகாசி | முத்தப்பா / சிவகாசி | அசின், நயன்தாரா, | பேரரசு | |
| 2005 | சுக்ரன் | சுக்ரன் | ரவி கிருஷ்ணா, நதீஷா, ரம்பா | எஸ்.ஏ. சந்திரசேகர் | சிறப்புத் தோற்றம் |
| 2005 | சச்சின் | சச்சின் | ஜெனிலியா, பிபாசா பாசு, | ஜான் மகேந்திரன் | தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது. |
| 2005 | திருப்பாச்சி | சிவகிரி | திரிஷா, மல்லிகா | பேரரசு | அன்னாவரம் என்ற பெயரில் தெலுங்கில் மீளுருவாக்கப்பட்டது. |
| 2004 | மதுர | மதுரைவேல் | சோனியா அகர்வால், ரக்ஷிதா, தேஜாஸ்ரீ | ஆர். மாதேஷ் | |
| 2004 | கில்லி | சரவணவேலு / கில்லி | திரிஷா | தரணி | ஒக்கடு(2003) என்ற தெலுங்கு படத்தின் மீளுருவாக்கம். |
| 2004 | உதயா | உதயக்குமரன் | சிம்ரன் | அழகம் பெருமாள் | |
| 2003 | திருமலை | திருமலை | ஜோதிகா | ரமணா | |
| 2003 | புதிய கீதை | சாரதி | மீரா ஜாஸ்மின், அமீஷா பட்டேல் | கே. பி. ஜெகன் | |
| 2003 | வசீகரா | பூபதி | சினேகா | கே. செல்வபாரதி | |
| 2002 | பகவதி | பகவதி | ரீமா சென் | ஏ. வெங்கடேஷ் | |
| 2002 | யூத் | சிவா | சந்தியா, சிம்ரன் | வின்சென்ட் செல்வா | |
| 2002 | தமிழன் (திரைப்படம்) | சூர்யா | பிரியங்கா சோப்ரா | ஏ. மஜீத் | |
| 2001 | ஷாஜகான் | அசோக் | ரிச்சா பலோட், மீனா | ரவி | |
| 2001 | பத்ரி | பத்ரி | பூமிகா, மோனல் | அருண் பிரசாத் | |
| 2001 | பிரெண்ட்ஸ் | அரவிந்த் | தேவயானி, சூர்யா | சித்திக் | |
| 2000 | ப்ரியமானவளே | விஜய் | சிம்ரன் | கே. செல்வபாரதி | பவித்ரா பந்தம்(1996) என்ற தெலுங்கு படத்தின் மீளுருவாக்கம் |
| 2000 | குஷி | சிவா | ஜோதிகா, ஷில்பா ஷெட்டி | எஸ். ஜே. சூர்யா | |
| 2000 | கண்ணுக்குள் நிலவு | கௌதம் | சாலினி | ஃபாசில் | |
| 1999 | மின்சாரக் கண்ணா | கண்ணன்/காசி | ரம்பா | கே. எஸ். ரவிக்குமார் | |
| 1999 | நெஞ்சினிலே | கருணாகரன் | இசா கோபிகர் | எஸ்.ஏ. சந்திரசேகர் | |
| 1999 | என்றென்றும் காதல் | விஜய் | ரம்பா | மனோஜ் பட்னாகர் | |
| 1999 | துள்ளாத மனமும் துள்ளும் | குட்டி | சிம்ரன் | எஸ். எழில் | |
| 1998 | நிலாவே வா | சிலுவை | சுவலட்சுமி | ஏ. வெங்கடேசன் | |
| 1998 | பிரியமுடன் | வசந்த் | கௌசல்யா | வின்சென்ட் செல்வா | |
| 1998 | நினைத்தேன் வந்தாய் | கோகுல கிருஷ்ணன் | தேவயானி, ரம்பா | கே. செல்வபாரதி | |
| 1997 | காதலுக்கு மரியாதை | ஜீவானந்தம் | சாலினி | ஃபாசில் | அனியாதிப்றவு(1997) என்ற மலையாள படத்தின் மீளுருவாக்கம். |
| 1997 | நேருக்கு நேர் | விஜய் | சூர்யா, சிம்ரன், கௌசல்யா | வசந்த் | |
| 1997 | ஒன்ஸ்மோர் | விஜய் | சிம்ரன், சிவாஜி கணேசன்,சரோஜாதேவி | எஸ்.ஏ. சந்திரசேகர் | |
| 1997 | லவ் டுடே | கணேஷ் | சுவலட்சுமி | பாலசேகரன் | |
| 1997 | காலமெல்லாம்காத்திருப்பேன் | கண்ணன் | டிம்ப்பல் | ஆர். சுந்தர்ராஜன் | |
| 1996 | செல்வா | செல்வா | சுவாதி | ஏ. வெங்கடேசன் | |
| 1996 | மாண்புமிகு மாணவன் | சிவா | கீர்த்தனா | எஸ்.ஏ. சந்திரசேகர் | |
| 1996 | வசந்த வாசல் | விஜய் | சுவாதி | எம். ஆர். சச்சுதேவன் | |
| 1996 | பூவே உனக்காக | ராஜா | சங்கீதா, அஞ்சு அரவிந்த் | விக்ரமன் | |
| 1996 | கோயம்புத்தூர் மாப்ளே | பாலு | சங்கவி | சி. ரெங்கனாதன் | |
| 1995 | சந்திரலேகா | ரகீம் | வனிதா, விஜயகுமார் | நம்பிராஜன் | |
| 1995 | விஷ்ணு | விஷ்ணு | சங்கவி | எஸ்.ஏ. சந்திரசேகர் | |
| 1995 | ராஜாவின் பார்வையிலே | விஜய் | இந்திரா அஜித் | ஜானகி சௌந்தர் | |
| 1994 | தேவா | தேவா | சுவாதி | எஸ்.ஏ. சந்திரசேகர் | |
| 1994 | ரசிகன் | விஜய் | சங்கவி | எஸ்.ஏ. சந்திரசேகர் | |
| 1993 | செந்தூரப் பாண்டி' | விஜய் | யுவராணி, விஜயகாந்த் | எஸ்.ஏ. சந்திரசேகர் | |
| 1992 | நாளைய தீர்ப்பு | விஜய் | கீர்த்தனா | எஸ்.ஏ. சந்திரசேகர் | அறிமுகம் |
| 1987 | சட்டம் ஒரு விளையாட்டு | விஜய் | எஸ்.ஏ. சந்திரசேகர் | குழந்தை நட்சத்திரம்,சிறப்புத் தோற்றம் | |
| 1985 | நான் சிவப்பு மனிதன் | விஜய் | எஸ்.ஏ. சந்திரசேகர் | குழந்தை நட்சத்திரம்,சிறப்புத் தோற்றம் | |
| 1984 | வெற்றி | விஜய் | விஜயகாந்த் | எஸ்.ஏ. சந்திரசேகர் | குழந்தை நட்சத்திரம்,சிறப்புத் தோற்றம் |
பின்னணிப் பாடகர் [தொகு]
இவர் சில திரைப்பட பாடல்களுக்கு பின்னணிப் பாடகராக இருந்திருக்கிறார். அவை,
| ஆண்டு | பாடல் | படம் | வேறு குறிப்புக்கள் | |
|---|---|---|---|---|
| 2012 | கூகுள் கூகுள் | துப்பாக்கி | ஏ. ஆர். முருகதாஸ் தோன்றும் காட்சி இடம்பெரும் பாடல் | |
| 2005 | வாடி வாடி | சச்சின் | ||
| 2002 | கொக்கா கோலா | பகவதி | ||
| உள்ளதை கிள்ளாதே | தமிழன் | |||
| 2001 | என்னோட லைலா | பத்ரி | ||
| 2000 | மிச்சிச்சிப்பி நதி குலுங்க | பிரியமானவளே | ||
| சின்னன் சிறு | கண்ணுக்குள் நிலவு | |||
| இரவு பகலை | கண்ணுக்குள் நிலவு | |||
| 1999 | தங்கநிரதுகு | நெஞ்சினிலே | ||
| 1998 | டிக் டிக் டிக் | துள்ளி திரிந்த களம் | ||
| ரோட்டுல ஒரு | பெரியன்ன | |||
| தம்மடிக்கிற ஸ்டைல பாத்து | பெரியன்ன | |||
| காலத்துக்கு ஒரு கன | வேலை | |||
| சந்திர மண்டலத்தை | நிலாவே வா | |||
| நிலவே.. நிலவே | நிலாவே வா | |||
| மௌரிய மௌரிய | ப்ரியமுடன் | |||
| 1997 | ஓஹ பேபி பேபி | காதலுக்கு மரியாதை | ||
| ஊர்மிளா ஊர்மிளா | ஒன்ஸ் மோர் | |||
| 1996 | சிக்கன் கரே | செல்வா | ||
| அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி | காலமெல்லாம் காத்திருப்பேன் | |||
| திருப்பதி போனா மொட்ட | மாண்புமிகு மாணவன் | |||
| 1995 | பாம்பை பார்ட்டி ஷில்பா ஷெட்டி | கோயம்புத்தூர் மாப்ளே | ||
| 1994 | தொட்டபெட்லே | விஷ்ணு | ||
| 1994 | அடடா அலமேலு ஆவின் பசும்பாலு | தேவா | ||
| 1994 | கோத்தகிரி குப்பம்மா | தேவா |
விருதுகள் [தொகு]
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் [தொகு]
- காதலுக்கு மரியாதை (1998)- சிறந்த நடிகர் விருது
- திருபாச்சி (2005)- சிறந்த நடிகர் விருது (சிறப்பு விருது)
விஜய் தொலைக்காட்சி [தொகு]
விஜய் தொலைக்காட்சியால் இந்நடிகருக்கு சில விருதுகள் வழங்கப்பட்டன. அவை
| விருது | திரைப்படங்கள் | ஆண்டு | மூலம் |
|---|---|---|---|
| நாளைய சூப்பர் ஸ்டார் | திருப்பாச்சி, சிவகாசி | 2006 | [7] |
| இந்த ஆண்டின் கேளிக்கையாளர் | போக்கிரி, அழகிய தமிழ் மகன் | 2007 | [8] |
| விருப்பமான நாயகன் | வேட்டைக்காரன் | 2009 | [9] |
பிற விருதுகள் [தொகு]
- கில்லி (2004)- சென்னை கார்பரேட் கிளப் சிறந்த நடிகர் விருது
- கில்லி (2004)- தினகரன் சிறந்த நடிகர் விருது
- கில்லி (2004)- பிலிம் டுடே சிறந்த நடிகர் விருது
- பொதுச்சேவை அறிவிப்பு (2005)-க்கு வெள்ளி விருது
- போக்கிரி (2007)- தமிழின் சிறந்த நடிகருக்கான அம்ரிதா மாத்ருபூமி விருது
- போக்கிரி (2007)- சிறந்த நடிகருக்கான இசை அருவி தமிழ் இசை விருது
- வேட்டைக்காரன்(2009)- சிறந்த நடிகருக்கான இசைஅருவி தமிழ் இசை விருது
- துப்பாக்கி, நண்பன்(2012) - விகடன் சிறந்த நடிகர் விருது
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "விஜய்க்காக ' தளபதி ANTHEM ' !". Vikatan. 10 January 2012. http://cinema.vikatan.com/?option=com_content&view=article&id=1736&cid=903&Itemid=63. Retrieved 10 January 2012.
- ↑ South Indian actor Vijay brand ambassador of Jos Alukkas
- ↑ Ad. Bug bites Vijay again
- ↑ Official: '3 Idiots' is 'Nanban'. Vijay is Aamir Khan
- ↑ Makeovers take over!
- ↑ www.indiaglitz.com/channels/tamil/article/66435.html
- ↑ Vijay Awards. Starboxoffice.com (2008-01-02). Retrieved on 2011-06-06.
- ↑ http://www.starboxoffice.com/kollywood/vijayawards/about.html
- ↑ http://beta.thehindu.com/news/cities/Chennai/article441682.ece?homepage=true
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் விஜய் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
|
||||||||