மீனா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனா (பிறப்பு: 16 செப்டம்பர், 1977; சென்னை) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார். இவரது முதல் திரைப்படம் செவாலியோர் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படமாகும். 90களில் இருது 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் தெலுங்குப் படவுலகில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். முத்து திரைப்படம் சப்பானில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து சப்பான் நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். தற்போது தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
[தொகு] குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
- என் ராசாவின் மனசிலே
- எஜமான்
- அவ்வை சண்முகி
- வீரா
- முத்து
- சிட்டிசன்
- ரிதம்
- வில்லன்
- பொற்காலம்
- அன்புள்ள ரஜினிகாந்த்
[தொகு] வெளி இணைப்புகள்
|
|||||||||||