ரம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரம்பா
ரம்பா நடிகை.jpg
இயற் பெயர் விசயலட்சுமி
பிறப்பு ஜூன் 5, 1974 (1974-06-05) (அகவை 40)
இந்தியாவின் கொடி விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
குறிப்பிடத்தக்க படங்கள் உள்ளத்தை அள்ளித்தா

ரம்பா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அவருடைய இயற்பெயர் விசயலட்சுமி ஆகும். திரைப்படத்திற்காகத் த்னது பெயரை முதலில் அம்ரிதா எனவும் பின் ரம்பா எனவும் மாற்றி வைத்துக்கொண்டார்.

அவர் ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர். அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக தோன்றிப் புகழ் பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்புகள்[தொகு]

ரம்பா நடித்த முதல் படம் ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கிய 1993ஆம் ஆண்டு வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற தெலுங்குப் படமாகும்.

மலையாளத்தில் அவருடைய முதல் படம் வினீத்துடன் நடித்து 1992ஆம் ஆண்டு வெளியான சர்கம் ஆகும். அதே ஆண்டு வினீத்துடன் நடித்து வெளியான மற்றொருத் திரைப்படம் சம்பகுளம் தச்சன் ஆகும்.

தமிழில் அவர் நடித்த முதல் படம் கதிர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான உழவன் ஆகும். அவருடைய இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா வெற்றி பெற்று அவருக்குப் பெரும் புகழை அள்ளித் தந்தது.

ரம்பா அவருடைய சகோதரர் வாசுவுடன் இணைந்து த்ரீ ரோசஸ் என்ற தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தார். அத்திரைப்படத்தில் ரம்பாவுடன் இணைந்து ஜோதிகா மற்றும் லைலா ஆகியோர் நடித்த்னர்.

ரம்பா நடித்த குயிக் கன் முருகன் என்ற திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என பல்மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. அதில் அவர் நடித்த மேங்கோ டாலி என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றார்.

தற்பொழுது கனடா நாட்டைச் சேர்ந்த மேஜிக் உட் என்ற நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரம்பா&oldid=1563726" இருந்து மீள்விக்கப்பட்டது