முரளி (தமிழ் நடிகர்)
| முரளி | |
|---|---|
![]() |
|
| பிறப்பு | மே 19, 1964 பெங்களூரு, இந்தியா |
| இறப்பு | செப்டம்பர் 8 2010 (அகவை 46) சென்னை, இந்தியா |
| தொழில் | நடிகர் |
| நடிப்புக் காலம் | 1984 - 2010 |
| துணைவர் | ஷோபா |
முரளி (மே 19, 1964 - செப்டம்பர் 8, 2010) தமிழ்த் திரைப்பட நடிகர்[1]. கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 -ல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1990-ல் வந்த “புதுவசந்தம்”, 1991 -ல் வந்த “இதயம்”, படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “கடல் பூக்கள்” என்ற படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார்.
பொருளடக்கம் |
குடும்பம் [தொகு]
முரளியின் தந்தை சித்தலிங்கையா கன்னடர். பல படங்களைத் தயாரித்துள்ளார். முரளியின் தாயார் தமிழகத்தைச் சேர்ந்தவர். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகாஷ் என்ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர்.
அதர்வா “பாணா காத்தாடி” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் முரளி சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.
அரசியல் [தொகு]
இவர் அ.தி.மு.கவில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார். இக்கட்சிக்காகத் தேர்தலில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரமும் செய்தார்.
முரளி நடித்த படங்கள் [தொகு]
- பூ விலங்கு (1984)
- புதியவன் (1984)
- இங்கேயும் ஒரு கங்கை (1984)
- இளங்கன்று (1985)
- பகல்நிலவு (1985)
- ஒரு மலரின் பயணம் (1985)
- கீதாஞ்சலி (1985)
- புதிர் (1986)
- மண்ணுக்குள் வைரம் (1986)
- காலமெல்லாம் உன் மடியில் (1986)
- புயல் பாடும் பாட்டு (1987)
- வண்ணக்கனவுகள் (1987)
- குடும்பம் ஒரு கோவில் (1987)
- வளையல் சத்தம் (1987)
- துளசி (1987)
- தப்புக்கணக்கு (1988)
- அவள் மெல்ல சிரித்தால் (1988)
- தங்கமணி ரங்கமணி (1989)
- கைவீசம்மா கைவீசு (1989)
- நினைவுச்சின்னம் (1989)
- நாங்கள் புதியவர்கள் (1990)
- புதியக்காற்று (1990)
- புது வசந்தம் (1990)
- நம்ம ஊரு பூவாத்தா (1990)
- பாலம் (1990)
- வெற்றிமாலை (1990)
- எதிர்காற்று (1990)
- நானும் இந்த ஊருதான் (1990)
- சிலம்பு (1990)
- சிறையில் சில ராகங்கள் (1990)
- இதயம் (1991)
- சாமி போட்ட முடிச்சு (1991)
- குறும்புக்காரன் (1991)
- இரவுச்சூரியன் (1991)
- தங்க மனசுக்காரன் (1992)
- சின்ன பசங்க நாங்க (1992)
- தங்கராசு (1992)
- என்றும் அன்புடன் (1992)
- தாலி கட்டிய ராசா (1992)
- போர்க்களம் (1992)
- தங்கக்கிளி (1993)
- மணிக்குயில் (1993)
- மஞ்சுவிரட்டு (1994)
- சத்யவான் (1994)
- அதர்மம் (1994)
- தொண்டன் (1995)
- பூமணி (1996)
- ரோஜா மலரே (1997)
- காலமெல்லாம் காதல் வாழ்க (1997)
- வீரத்தாலாட்டு (1998)
- தினம்தோறும் (1998)
- ரத்னா (1998)
- உன்னுடன் (1998)
- என் ஆச ராசாவே (1998)
- தேசியகீதம் (1998)
- காதலே நிம்மதி (1998)
- பூந்தோட்டம் (1998)
- பூவாசம் (1999)
- கனவே கலையாதே (1999)
- ஊட்டி (1999)
- கண்ணுக்கு கண்ணாக (2000)
- மனுநிதி (2000)
- வெற்றிக்கொடிகட்டு (2000)
- கடல் பூக்கள் (2000)
- அள்ளித்தந்த வானம் (2001)
- சொன்னால் தான் காதலா (2001)
- ஆனந்தம் (2001)
- சமுத்திரம் (2001)
- காமராசு (2002)
- நம்ம வீட்டு கல்யாணம் (2002)
- சுந்தரா ட்ராவல்ஸ் (2002)
- லவ்வர்ஸ் (2004)
- காதலுடன் (2004)
- பாசக்கிளிகள் (2006)
- திருடி (2006)
- எங்கள் ராசி நல்ல ராசி (2008)
- நீ உன்னை அறிந்தால் (2009)
- பானா காத்தாடி (2010)
மறைவு [தொகு]
இவர் 46 வது வயதில் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் மாரடைப்பால் மரணமடைந்தார்[2].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://www.jointscene.com/artists/Kollywood/Murali/152
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news-1/sep-10-02/murali-08-09-10.html
|
||||||||
