பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மரக்குற்றிகளால் அமைக்கப்பட்ட ஒரு பாலம்

பாலம் என்பது, வீதிகள், தொடர்வண்டிப்பாதைகள், ஆறுகள், வேறு நீர்நிலைகள் போன்ற தடைகளைக் கடப்பதற்காக கட்டப்படும் அமைப்புகள் ஆகும். பொதுவாகப் பாலங்கள் அவற்றுக்குக் கீழாக வீதி அல்லது நீர்ப் போக்குவரத்துக்களை அனுமதிக்கக் கூடியதாக, தகுந்த உயரத்திலும், உரிய வடிவமைப்பிலும் நிர்மாணிக்கப்பட்டிருக்கும்.

பொதுவாகப் பாலங்களின் நோக்கம், இடங்களுக்கிடையே தொடர்ச்சியானதும், சீரானதும், இலகுவாகப் பயணம் செயத்தக்கதுமான பாதையொன்றை உருவாக்குவதன் முலம் போக்குவரத்தை இலகுவாக்குவதாகும்.

[தொகு] வரலாறு

ஸ்பெயின், கொர்டோபாசவில் இருக்கும் கி.மு முதலாம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட ரோமானிய பாலம்.

ஆரம்பகாலப் பாலங்கள், மரக்குற்றிகளால் நிர்மாணிக்கப்பட்டன. இத்தகைய பாலங்களை இன்றும் கிராமப் பகுதிகளில் காணமுடியும். இதற்காகப் பொதுவாக ஒரே நீளமான, தென்னை, பனை போன்ற மரங்கள் பயன்படுத்தப்படுவதைக் காணமுடியும். பின்னர் கல்லாலான தூண்களின் மீது கல்லாலான அல்லது மர உத்தரங்களை வைத்துப் பாலம் அமைக்கப்பட்டது. இத்தகைய முறைகள் மூலம் கூடிய தூரங்களைக் கடக்கப் பாலம் அமைக்க முடியாது.

பாலங்களும், நீர்காவிகளும் அமைப்பதற்காக வளைவு (கட்டிடக்கலை) அமைப்புகளை முதன்முதலாகப் பயன்படுத்தியவர்கள் ரோமானியர் ஆவர். இவர்கள் கட்டிய மேற்படி அமைப்புக்கள் சில இன்றும் நிலைத்திருப்பதைக் காணமுடியும்.

[தொகு] பால வகைகள்

பாலங்களில் ஆறு முக்கிய வகைகள் உள்ளன. அவை

  • கற்றை பாலம்
  • பிடிமானமான பாலம் (cantilever bridges)
  • வளைவு பாலங்கள்
  • தொங்கு பாலங்கள்
  • வடம்-தங்கி பாலங்கள்
  • சட்டக பாலங்கள்.

[தொகு] பலவகைப் பாலங்களும் அது தொடர்பான அமைப்புகளும்

"http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&oldid=1039860" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்