பிரபுதேவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரபுதேவா
Prabhudeva at Wanted press meet.jpg
இயற் பெயர் பிரபுதேவாசுந்தரம்
பிறப்பு ஏப்ரல் 3, 1973 (1973-04-03) (அகவை 41)
மைசூர், கர்நாடகம், இந்தியா
தொழில் நடன அமைப்பாளர், நடிகர், இயக்குனர்
நடிப்புக் காலம் 1987—தற்போதுவரை
துணைவர் லதா

பிரபுதேவா ( ஏப்ரல் 3, 1973, சென்னை) இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவரின் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப் படுகின்றார். இவரது முதலாவது நடனம் வெற்றிவிழாத் திரைப்படத்திற்கானதாகும். இவர் 100 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். மின்சாரக் கனவு திரைப்படத்திற்காக சிறந்த தேசிய நடன விருதையும் பெற்றுக் கொண்டார்.

முழுநேர நடிகராவதற்கு முன்னர் திரைப்படங்களில் நடனமாடி வந்தார். இவர் முதலாவது திரை கதாநாயகனாக இந்து திரைப்படத்தில் ரோஜாவுடன் நடித்தார். தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் பிரபு தேவா பெற்றுக் கொண்டார்.

நடன ஆசிரியர் (டான்ஸ்மாஸ்டர்) சுந்தரத்தின் மகனான இவர் நடனத்தை மிகவும் ஆர்வத்துடன் செய்வார். நடனத்துறையில் இருந்து நடிப்புலகிற்கு வந்தார். மற்றவர்களால் முடியாத நடனத்தின் போது அடியெடுக்கும் முறையினால் இவர் ஓர் கொலிவூட் திரைப்படவுலகில் நட்சத்திரம் ஆக விளங்கினார். தமிழ் தெலுங்குத் திரைப்பட உலகில் இவரது நடனம் மிகவும் பிரசித்தி பெற்றது.

தேசியவிருது[தொகு]

மின்சாரக் கனவு திரைப்படத்தில் "வெண்ணிலவே வெண்ணிலவே" பாடலுக்கு நடனம் மூலம் தேசியவிருது பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

திருமணமாகி 2 பிள்ளைகள் உண்டு.

திரையுலகில்[தொகு]

பிரபுதேவா பின்னணி நடன கலைஞராக அக்னி நட்சத்திரம் போன்ற திரைப்படங்களில் ஆடியிருந்தாலும், முரளி நடித்த இதயம் திரைப்படத்தின் ஏப்ரல் மேயிலே பாடலிலேயே முதன்மை நடன கலைஞராக அறிமுகமானார். இந்த பாடல் நல்ல புகழ்பெற்றாலும் அதன்பின்னர் ஜெண்டில்மேன் திரைப்படத்தில் இவரது சிறந்த நடனம் இவரை முன்னுக்கு அனுப்பியது. அப்படத்தின் சிக்குப் புக்கு சிக்குப் புக்கு ரயிலே பாடலிற்கு இவர் ஆடிய நடனம் இளைஞர்களைப் பைத்தியமாக்கியது. இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடலிற்குப் பின்னணியில் ராஜூ சுந்தரத்துடன் நடனமாடினார். இத்திரைப்படத்திற்கு இவரது தந்தையே நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து ஷங்கரின் இயக்கத்தில் உருவான காதலன் திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்தார். இது தமிழில் மட்டும் அன்றி பிறமொழிகளில் வெளியான இதன் மொழிபெயர்ப்புகளும் வெற்றியடைந்தன. இவர் பலபடங்களில் நடித்தபோதும் இவரது நடிப்புத்திறமை ஏழையின் சிரிப்பிலே திரைப்படத்திலேயே வெளிக்காட்டப்பட்டது. இப்படத்திலே இவர் ஓர் பேருந்துகூலி வேலையாளாக நடித்தார்.

நடித்த சில திரைப்படங்கள்[தொகு]

 • இந்து
 • காதலன்
 • மிஸ்டர் ரோமியோ
 • அள்ளித்தந்த வானம்
 • காதலா காதலா
 • மனதைத் திருடிவிட்டாய்
 • லவ் பேட்ஸ் (தமிழ்)
 • மின்சார கனவு (தமிழ்)
 • விஐபி (தமிழ்)
 • நாம் இருவர் நமக்கு இருவர் (தமிழ்)
 • பெண்ணின் மனதை தொட்டு
 • காதலா காதலா (தமிழ்)
 • ஜேம்ஸ்பாண்ட் (தமிழ்)
 • டபிள்ஸ் (தமிழ்)
 • சுயம்வரம் (தமிழ்)
 • டைம் (தமிழ்)
 • ஏழையின் சிரிப்பிலே (தமிழ்)
 • சந்தோஷம் (தெலுங்கு)
 • தோட்டிகாங் (தெலுங்கு)
 • அக்னி வர்ஷா (தெலுங்கு)
 • பெண்ணின் மனதைத் தொட்டு (தமிழ்)
 • எங்கள் அண்ணா (தமிழ்)
 • சுக்காலோ சந்டுரு (தெலுங்கு)
 • ஸ்டைல் (தெலுங்கு)
 • வானத்தைப் போல

இயக்குனராக[தொகு]

நடனமாடுபவராக[தொகு]

 • இதயம் (தமிழ்)
 • வால்டர் வெற்றிவேல்
 • பாபா (தமிழ்)
 • சூரியன் (தமிழ்)
 • ஜெண்டில்மேன் (தமிழ்)
 • லக்ஸ்ஷயா (ஹிந்தி)
 • புகார் (ஹிந்தி)
 • ஸக்தி தி பவர் (ஹிந்தி)
 • நுவோஸன்ரனேட்டே நினோடண்ட்ட (தெலுங்கு)
 • அக்கினி நட்சத்திரம்

சர்ச்சை[தொகு]

இவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இடையே காதல் என்று பரவலாக பத்திரிகைகளில் பேசப்பட்டது. பின் தன் மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெற்றார். பின்னர் நயன்தாராவுடனான உறவும் முடிவுக்குவந்துவிட்டதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரபுதேவா&oldid=1757666" இருந்து மீள்விக்கப்பட்டது