சென்னை சூப்பர் கிங்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சென்னை சூப்பர் கிங்ஸ்

(Chennai Super Kings)

Chennai Super Kings
பயிற்றுனர்: சுடீபன் பிளெமிங்
தலைவர்: மகேந்திர சிங் தோனி
நிறங்கள்: மஞ்சள் மற்றும் நீலம்            
அமைப்பு: 2008
இல்ல அரங்கு: எம் ஏ சிதம்பரம் மைதானம் (சேப்பாக்கம்)
கொள்ளளவு: 50,000
உரிமையாளர்: இந்தியா சிமெண்ட்ஸ் லிட்..
வலைத்தளம்: சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாக்கிய இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் சென்னை ஒப்போலை உரிமையின் பெயராகும். அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனியாவார் அணியின் பயிற்றுவிப்பாளார் முன்னாள் தென்னாபிரிக்க துடுப்பாட்ட அணியின் வீரர் கெப்லர் வெசல்சு ஆவார்.

பொருளடக்கம்

ஒப்போலை உரிமையின் வரலாறு [தொகு]

இந்தியன் பிரிமியர் லீக்கில் காணப்படும் 8 அணிகளில் ஒன்றாகும். இந்த ஒப்போலை உரிமை 91 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வரும் 10 ஆண்டுகளுக்கு இந்திய சிமேந்து நிறுவனத்தால் வாங்கப்பட்டது. இந்த ஒப்போலை உரிமையின்) விளம்பர நட்சத்திர தூதுவர் இந்திய துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆவார் மற்றொரு முன்னாள் இந்திய வீரரான வி.பி.சந்திரசேகர் அணியின் தலைமை தேர்வாளர் ஆவார். மக்களிடம் துடுப்பாட்டப் போட்டியை கொண்டு சேர்க்க அணிக்கான விளம்பர நட்சத்திர தூதுவர்களாக திரைப்பட நடிகர்களான விஜய்யும் நயன்தாராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.[1][2] சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் அணியின் இல்ல அரங்கமாக காணப்படும். அணிக்கான கருப்பொருள் பாடலை வைரமுத்து எழுதியிருப்பதோடு மணி சர்மா இசையமைத்துள்ளார் கருப்பொருள் நிகழ்படத்தை ராஜிவ் மேனன் இயக்கியுள்ளார்.

பெயரின் விளக்கம் [தொகு]

சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயர் சங்க கால தமிழ் அரசர்களை குறிக்கிறது. அணியின் சின்னம் காட்டு ராஜாவான சிங்கம் ஆகும். இது தமிழகத்தை ஆண்ட பல்லவர்களின் சின்னமும் ஆகும். சூப்பர் கிங்ஸ் என்ற பெயர், இவ்வணியின் உரிமையாளர்களான இந்தியா சிமேண்ட்ஸ் நிருவணத்தின் கோரமாண்டல் சூப்பர் கிங் என்ற சிமேண்ட் வகையின் பேயரையும் குறிக்கலாம்.

தற்போதைய அணி [தொகு]

மட்டையாளர்கள்

இலக்கம் பெயர் வயது நாடு மட்டையாடும் பாணி பந்துவீச்சு/களக்காப்பு ஏலம்/ புகுதிகை விலை
1 மத்தேயு ஹெய்டன் 36 ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா இடது-கை வலது-கை மத்திம $ 375,000
2 சுடீபன் பிளெமிங் 35 நியூசிலாந்து கொடி நியூசிலாந்து இடது-கை வலது-கை மத்திம $ 350,000
3 சுரேஷ் ரைனா 21 இந்தியாவின் கொடி இந்தியா இடது-கை வலது-கை ஓஃப் பிரேக் $ 650,000
4 மைக்கேல் ஹசி 32 ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா இடது-கை வலது-கை மத்திம $ 350,000
5 அனிருத்தா ஸ்ரீகாந்த் 21 இந்தியாவின் கொடி இந்தியா வலது-கை 22 வயதுகுட்பட்ட வீரர்
6 சுப்பிரமணியம் பத்திரிநாத் 28 இந்தியாவின் கொடி இந்தியா வலது-கை வலது-கை ஓஃப் பிரேக் தமிழ்நாடு - ரஞ்சி கோப்பை வீரர்
7 அருண் கார்திக் 22 இந்தியாவின் கொடி இந்தியா வலது-கை வலது கை 22 வயதுகுட்பட்ட வீரர்
8 வித்யுத் சிவராம்கிருஷ்ணன் 26 இந்தியாவின் கொடி இந்தியா இடது-கை இடது கை மரபுவழி தமிழ்நாடு - ரஞ்சி கோப்பை வீரர்

குச்சக் காப்பளர்கள் / சகல துறை ஆட்டக்காரர்கள்

இலக்கம் பெயர் வயது நாடு மட்டையாடும் பாணி பந்துவீச்சு/களக்காப்பு ஏலம்/ புகுதிகை விலை
1 மகேந்திர சிங் தோனி (தலைவர்) 26 இந்தியாவின் கொடி இந்தியா வலது-கை குச்சக் காப்பளர்/ வலது-கை மத்திம $ 1,500,000
2 பார்த்திவ் படேல் 22 இந்தியாவின் கொடி இந்தியா இடது-கை குச்சக் காப்பளர் $ 325,000
3 ஜேகப் ஓரம் 28 நியூசிலாந்து கொடி நியூசிலாந்து இடது-கை வலது-கை மத்திம-வேக $ 675,000
4 அல்பியே மோர்கெல் 28 தென்னாப்பிரிக்கா கொடி தென்னாபிரிக்கா இடது-கை வலது-கை வேக-மத்திம $ 675,000
5 சதாப் ஜாகதி 27 இந்தியாவின் கொடி இந்தியா இடது-கை இடது-கை மரபு சுழல் கோவா- ரஞ்சி கோப்பை வீரர்
6 அபிநவ் முகுந் 18 இந்தியாவின் கொடி இந்தியா இடது-கை வலது-கை வேக கால் சுழல் இந்திய 19 வயதுக்கு குறைந்த அணி
7 விராஜ் காட்பே 18 இந்தியாவின் கொடி இந்தியா வலது-கை வலது-கை வேக கால் சுழல் $ 30,000 - 22 வயதுகுட்பட்ட வீரர்
8 நெப்போலியன் ஐன்ஸ்டைன் 18 இந்தியாவின் கொடி இந்தியா வலது-கை வலது கை இந்திய 19 வயதுக்கு குறைந்த அணி
9 செல்வம் சுரேஷ் குமார் 23 இந்தியாவின் கொடி இந்தியா வலது-கை வலது-கை வேக ஓஃப் சுழல் தமிழ்நாடு - ரஞ்சி கோப்பை வீரர்
10 திலன் துசாரா 27 இலங்கையின் கொடி இலங்கை இடது-கை இடது-கை மத்திம $ 140,000[3]
11 ஜார்ஜூ பெய்லி 26 ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா வலது-கை வலது-கை மத்திம $ 50,000[4]


பந்து வீச்சாளர்கள்

இலக்கம் பெயர் வயது நாடு மட்டையாடும் பாணி பந்துவீச்சு/களக்காப்பு ஏலம்/ புகுதிகை விலை
1 முத்தையா முரளிதரன் 35 இலங்கையின் கொடி இலங்கை வலது-கை வலது-கை வேக ஓஃப் சுழல் $ 600,000
2 ஜோகீந்தர் சர்மா 24 இந்தியாவின் கொடி இந்தியா வலது-கை வலது-கை வேக-மத்திம $ 225,000
3 மகாயா நீடீனி 30 தென்னாப்பிரிக்கா கொடி தென்னாபிரிக்கா வலது-கை வலது-கை வேக $ 200,000
4 ரவிச்சந்திரன் அசுவின் 21 இந்தியாவின் கொடி இந்தியா வலது-கை வலது-கை வேக ஓஃப் சுழல் 22 வயதுகுட்பட்ட வீரர்
5 மன்பிரீட் கோனி 24 இந்தியாவின் கொடி இந்தியா வலது-கை வலது-கை மத்திம பஞ்சாப்- ரஞ்சி கோப்பை வீரர்[5]
6 லக்சுமிபதி பாலாஜி 26 இந்தியாவின் கொடி இந்தியா வலது-கை வலது-கை வேக-மத்திம தமிழ்நாடு - ரஞ்சி கோப்பை வீரர்[6]
7 பழனி அமரநாத் 25 இந்தியாவின் கொடி இந்தியா வலது-கை வலது-கை மத்திம தமிழ்நாடு - ரஞ்சி கோப்பை வீரர்

மேற்கோள்கள் [தொகு]

  1. விளம்பர நட்சத்திர தூதுவர்கள் நியமனம்
  2. Vijay & Nayan to endorse Chennai Super Kings - Sify.com
  3. http://www.chennaisuperkings.com/news/NewsContent.aspx?NewsID=111
  4. http://www.chennaisuperkings.com/news/NewsContent.aspx?NewsID=111
  5. Manpreet Gony replaces Sudeep Tyagi
  6. Cricinfo - Balaji joins Chennai Super Kings


"http://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_சூப்பர்_கிங்ஸ்&oldid=1403319" இருந்து மீள்விக்கப்பட்டது