ஸ்ரீகாந்த் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்ரீகாந்த்
பிறப்பு ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி
பெப்ரவரி 28, 1979 (1979-02-28) (அகவை 33)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணி திரைப்பட நடிகர்
செயல்பட்ட ஆண்டுகள் 2002 – இன்றுவரை
வாழ்க்கைத் துணை வந்தனா ஸ்ரீகாந்த்

ஸ்ரீகாந்த் (ஆங்கிலம்: Srikanth) ( பிறப்பு:28 பெப்ரவரி 1979) தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் தென்னிந்திய நடிகர் ஆவார். இவரது அறிமுகம் 2002ஆம் ஆண்டில் வெளியான ரோஜாக் கூட்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் அமைந்தது. இவரது திரைப்படங்கள் பார்த்திபன் கனவு மற்றும் தெலுங்கில் ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே பெரும் வெற்றிப்படங்களாக விளங்கின.[1] தெலுங்குத் திரைப்படங்களில் இவர் ஸ்ரீராம் என்று அறியப்படுகிறார்.

[தொகு] திரைவாழ்வு

ஸ்ரீகாந்த்தின் திரை நுழைவு ரோஜாக்கூட்டம் என்ற சசியின் காதல் படத்தில் பூமிகா சாவ்லாவுடன் அமைந்தது. முதல் திரைப்படமே வெற்றிப்படமாக அமைந்து பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது.[2] இவரது அடுத்த வெற்றிப்படமாக சினேகாவுடன் நடித்த ஏப்ரல் மாதத்தில் அமைந்தது. தொடர்ந்து கரு.பழனியப்பன் இயக்கத்தில் உருவான பார்த்திபன் கனவு இவருக்கு தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது கிடைத்தது.[3] பின்தொடர்ந்த படங்கள் தோல்வியைத் தழுவ சிலகாலம் வாய்ப்புகள் இன்றி இருந்தார். 2007ஆம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் தெலுங்கில் நடித்த ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே பெற்ற வெற்றியைத் தொடர்ந்து புகழ்பெற்ற இயக்குனர் சங்கரின் நண்பன் உட்பட பல புதிய படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.[4]

[தொகு] மேற்கோள்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீகாந்த்_(நடிகர்)&oldid=1121720" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்