சரோஜாதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பி. சரோஜாதேவி
பிறப்பு ஜனவரி 7, 1938 (1938-01-07) (அகவை 76)
கர்நாடகா, இந்தியா
தொழில் திரைப்படநடிகை
நடிப்புக் காலம் 1955-நடப்பு
துணைவர் ஸ்ரீ ஹர்ஷா

பி. சரோஜாதேவி ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கர்நாடகத்தைச் சேர்ந்த சரோஜா தேவி, ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உள்ளார்; 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைப்படத்துறையினரால் “கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய சரசுவதி” போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார். பல திரைப்பட விருதுகளையும், இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளார்.இவர் வொக்கலிகர் இனத்தில் பிறந்தவர்.

தமிழ் சினிமா உலகில் 25 வருடங்களாக முன்னணி நடிகையாக விளங்கியவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜிகணேசன், காதல் மன்னன் ஜெமினிகணேசன் ஆகிய 3 பேருடனும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர். ஒரு காலத்தில் 'சூப்பர் ஸ்டார்'களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.


பெங்களூரைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி பைரப்பா, ருத்ரம்மா ஆகியோரின் 4-வது மகளாகப் பிறந்த சரோஜா தேவி ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப்படத்தில் (1955) கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. கன்னடப் படத்தில், எடுத்த எடுப்பிலேயே கதாநாயகியாக அறிமுகமாகிப் புகழ்பெற்ற சரோஜாதேவிக்கு, தமிழ்நாட்டில் பெரிய புகழைத் தேடித்தந்த படம் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் (1958).

இதன்பின் ஸ்ரீதரின் 'கல்யாணப் பரிசு' 1959 படத்தில் நடித்து, நட்சத்திர அந்தஸ்து பெற்றார்.

அன்றைய கல்லூரி மாணவிகள், இவர் உடுத்திய ஆடைகள், அணிந்த அணிகலன்கள், மேற்கொண்ட சிகை அலங்காரங்கள் ஆகியவற்றைப் பின்பற்றித் தங்களை சிங்காரித்துக்கொண்டார்கள். 1960 – 70 வரையான பத்தாண்டு காலத் தமிழ்ப் பெண்களின் நடை, உடை பாவனைகளைத் தீர்மானித்த சக்தியாகத் திகழ்ந்தார். இவர் எம்.ஜி.ஆருடன் 26 படங்களில் நடித்தார்.

நடித்துள்ள திரைப்படங்கள்[தொகு]

தமிழ்[தொகு]

  1. நாடோடி மன்னன்
  2. கல்யாணப் பரிசு

தேசிய விருதுகள்[தொகு]

  • 2008 வாழ்நாள் சாதனையாளர்களுக்கான இந்திய அரசின் தேசிய விருது
  • 1992 பத்மபூஷன், இந்திய அரசின் தேசிய விருது
  • 1969 பத்மஸ்ரீ இந்திய அரசின் தேசிய விருது

பிற விருதுகள்

  • 2009 ஆந்திர அரசின் என் டி ஆர் தேசியவிருது
  • 2009 கர்நாடக அரசின் ராஐகுமார் தேசியவிருது
  • 2009 நாட்டிய கலாதர் - தமிழ் சினிமா by Bharat Kalachar Chennai
  • 2007 என் டி ஆர் விருது for remarkable achievement by Karnataka Telugu Academy
  • 2007 ரோட்டரி சிவாஜி விருது by the Charitable Trust and Rotary Club of Chennai
  • 2006 பெங்களூர் பல்கலைக் கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம்
  • 2003 தினகரன் சாதனையாளர் விருது
  • 2001 ஆந்திர அரசின் என்டிஆர் தேசியவிருது 2001
  • 1997 எம்.ஜி.ஆர். விருது - தமிழக அரசு
  • 1997 சாதனையாளர் விருது - சினிமா எக்ஸ்பிரஸ் சென்னை
  • 1997 Filmfare award for All-round Achievement
  • 1989 கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ விருது
  • 1980 அபினண்டன -காஞ்சனா மாலா விருது by Karnataka State
  • 1965 Honoured as a title "அபிநய சரஸ்வதி " - கர்நாடக அரசு

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சரோஜாதேவி&oldid=1704181" இருந்து மீள்விக்கப்பட்டது