தானே புயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தானே புயல் (06B)
அதிதீவிர சூறாவளிப் புயல் (இசூகது)
தரம் 1 வெப்பவலயப் புயல் (சபீர்-சிம்சன் அளவுகோல்)
திசம்பர் 29 இல் தானே புயல்

திசம்பர் 29 இல் தானே புயல்
தொடக்கம் திசம்பர் 25, 2011
மறைவு தற்போது இயக்கத்தில் உள்ளது
காற்றின் வேகம்
140 கிமீ/மணி (85 மைல்/மணி) (3-நிமிட நீடிப்பு)
150 கிமீ/மணி (90 மைல்/மணி) (1-நிமிட நீடிப்பு)
குறைவான அமுக்கம் 976 hPa (மில்லிபார்)
இறப்புகள் 33 [1]
சேதம் தெரியவில்லை
பாதிப்புப் பகுதிகள் கடலூர், புதுச்சேரி, விழுப்புரம்
2011 வங்கக் கடல் சூறாவளிப் பருவம்
திசம்பர் 27 இல் தானே புயல்

தானே புயல் (Cyclone Thane) என்பது 2011 ஆண்டில் வங்கக் கடலில் உருவான இரண்டாவதும், முதலாவது அதி தீவிரப் புயலும் ஆகும். இது கடலின் கிழக்கு மற்றும் தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது[2]. வங்கக் கடலில் தென் கிழக்குத் திசையில் 2011 திசம்பர் 25ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது மெல்ல மெல்ல வலுவடைந்து 2011 திசம்பர் 27ம் தேதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு 'தானே' என்று பெயரிடப்பட்டுள்ளது.[3] [4]


68.817 கடல் மைல் தூரத்தில் மையம் கொண்டிருந்த, "தானே' புயல், 2011 திசம்பர் 30 இல் சென்னை-நாகை இடையே புதுச்சேரி அருகில் கரையைக் கடக்கும் என்று எதிரபார்க்கப்பட்டது.[5] அப்போது தமிழக கடலோரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.[6] காற்றின் வேகம் அதிகபட்சமாக 90 முதல் 135 கிமீ வேகமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதனால் அது கடுமையான புயல் என்று அளவிடப்பட்டது. 30ம் தேதி வலிமை குறைந்து காற்றின் வேகம் 90 முதல் 110 கிமீ வேகம் இருக்கும்.

புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே டிசம்பர் 30, 2011 அன்று காலை 6.30 முதல் 7.30 மணிக்கு இடையே கரையைக் கடந்தது. [7]

பொருளடக்கம்

நாகையில் விடுமுறை [தொகு]

புயல் நாகையைத் தாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.[8]

பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை காவல்துறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுக்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்காலிக முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கரையைக் கடந்த புயல் [தொகு]

புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே டிசம்பர் 30, 2011 அன்று காலை 6.30 மணியளவில் கரையைக் கடந்தது. [9]அப்போது மணிக்கு 125 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால், புதுச்சேரியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடலூர் பகுதியிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் கரையைக் கடந்த போதிலும், பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவாரணப் பணிகளுக்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு [தொகு]

புயல் காரணமாக தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளவும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கவும் 150 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.[10]

உயிரிழப்புகள் [தொகு]

புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 39 பேரும், புதுச்சேரியில் ஏழு பேரும், சென்னையில் இரண்டு பேரும் என இதுவரையிலான உயிரிழப்புகள் அமைந்துள்ளன. [11]

புயல்களி்ன் பெயர்கள் [தொகு]

அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மியான்மர், ஒமன், மலேசியா ஆகிய நாடுகள் இணைந்து ஜெனிவாவில் உள்ள உலக வானிலை மையத்தில் பெயர்களை வழங்குவது வழக்கம். கடைசியாக பாகிஸ்தான் வழங்கிய நீலம் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது. அடுத்ததாக வீசப் போகும் புயலுக்கு மகேசன் என்று பெயரிடப்படவிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் 2013 ஏப்ரல் 29-ம் தேதி அறிவித்தார்.[12]

மேற்கோள்கள் [தொகு]

வெளி இணைப்பு [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தானே_புயல்&oldid=1412390" இருந்து மீள்விக்கப்பட்டது