சோனியா அகர்வால்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சோனியா அகர்வால் | |
|---|---|
| தொழில் | நடிகை |
| துணைவர் | செல்வராகவன் |
| இணையத்தளம் | இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் Sonia Agarwal |
சோனியா அகர்வால் (பிறப்பு - மார்ச் 28, 1982, பஞ்சாப்), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மொழித் திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். தமிழ் திரையுலகத்திற்கு காதல் கொண்டேன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை (நடிகர் தனுஷின் அண்ணன்) விரும்பி டிசம்பர் 15, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாறு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன.