குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வீட்டுக்குருவி
வீட்டுக்குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Passeridae
Illiger, 1811
Genera

Passer
Petronia
Carpospiza
Montifringilla

குருவி (Sparrow) முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். இந்தியாவில் இவை வீட்டுக்குருவிகள்,அடைக்கலங்குருவிகள் சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

பொருளடக்கம்

[தொகு] உடல் அமைப்பு

குருவிகள் உருவத்தில் சிறியனவாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். ஆண் பறவையில் இருந்து பெண் வேறுபட்டது. மேற்பாகம் தவிட்டு நிறத்தில் மஞ்சளும் கறுப்பும் கலந்த கோடுகள் கொண்டிருக்கும். அடிப்பாகம் வெளுப்பாக இருக்கும்[1].

[தொகு] வசிப்பிடம்

சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்லப் பறவைகளாக வளர்க்க முடியாது. மரத்திலும், வீடுகளில் மறைவான இடங்களில் வைக்கோல், மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன.

[தொகு] உணவுப் பழக்கம்

குருவிகள் தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.

[தொகு] வாழ்க்கைமுறை

குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும்[2]. குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன; பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.

[தொகு] துணை நூற்பட்டியல்

[தொகு] மேற்கோள்கள்

  1. சலீம் அலி, பக்.127
  2. சலீம் அலி, பக்.128
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்