ஏமி சாக்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏமி சாக்சன்
Amy Jackson attends press conference for 'Thaandavam' at London 04.jpg
இலண்டனில் 'தாண்டவம்' திரைப்படத்தின் செய்தியாளர் மாநாட்டில் ஏமி ஜாக்சன்
இயற் பெயர் ஏமி லூயிசு சாக்சன்
பிறப்பு ஜனவரி 31, 1991 (1991-01-31) (அகவை 23)
இங்கிலாந்தின் கொடி லிவர்பூல், இங்கிலாந்து.
தொழில் மாடல், நடிகை.

ஏமி லூயிசு சாக்சன் (Amy Jackson, ஏமி ஜாக்சன்) இங்கிலாந்தை சேர்ந்த வடிவழகி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களை வென்ற இவர் மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகினார்.

குடும்பம்[தொகு]

ஏமி சாக்சன் இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு அருகில் உள்ள குனவ்சுலி கிராமத்தில் சனவரி 31, 1991ல் பிறந்தார். இவரது தந்தை ஆலன் சாக்சன் பிபிசி வானொலியில் பனியாற்றியவர். தாயார் பெயர் மாக்ரிதா சாக்சன். ஏமிக்கு இரண்டு வயதான போது இவர்களது குடும்பம் லிவர்பூல் நகருக்கு குடிபெயர்ந்தது. அங்கு உள்ள புனித எட்வர்டு கல்லூரியில் தனது படிப்பை முடித்தார்.

அழகிப் பட்டங்கள்[தொகு]

இவர் 2008ம் அண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார்[1]. தொடர்ந்து லிவர்பூல் பதின்வயது அழகி 2010 (Miss Teen Liverpool) விருதையும் பெற்றார்[2]. இது தவிர உலக அலவில் 18 மேற்பட்ட அழகி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

நடிப்பு[தொகு]

ஏமி சாக்சன் 2010ல் வெளியான மதராசபட்டணம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் நடிகையாகவும் தனது முத்திரையை பதித்தார். இதுவே இவரது முதல் திரைப்பட அனுபவம் ஆகும். 1947 ம் ஆண்டு கதைக்களத்தில் உருவாக்கப் பட்ட இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்ததைத் தொடர்ந்து பலரது பாராட்டுகளையும் பெற்றார்.

தமிழில் நடித்த படங்கள்[தொகு]

படம் ஏற்ற கதாபாத்திரம் ஆண்டு
மதராசபட்டணம் ஏமி வில்கின்சன் 2010 ஜூலை
தாண்டவம் சாரா 2012
2013

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏமி_சாக்சன்&oldid=1356403" இருந்து மீள்விக்கப்பட்டது