சிரஞ்சீவி (நடிகர்)
| சிரஞ்சீவி | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| இயற் பெயர் | கொன்னிதெல சிவ சங்கரா வர பிரசாத் | |||||||||
| பிறப்பு | ஆகத்து 22, 1955 நரசப்பூர், மேற்கு கோதாவரி மாவட்டம் ஆந்திரா இந்தியா |
|||||||||
| தொழில் | நடிகர், அரசியவாதி | |||||||||
| நடிப்புக் காலம் | 1977 தொடக்கம் தற்போதுவரை | |||||||||
| துணைவர் | சுரேகா | |||||||||
| பிள்ளைகள் | சுஷ்மிதா, ராம் சரன் தேஜா, சிறீஜா | |||||||||
| பெற்றோர் | வெங்கட ராவோ, அஞ்சனா தேவி | |||||||||
|
||||||||||
சிரஞ்சீவி (தெலுங்கு: చిరంజీవి)) (பிறப்பு:1955 ஆகஸ்ட்டு 22) கொன்னிதெல சிவ சங்கரா வர பிரசாத் [1] என்ற இயற்பெயரைக் கொண்ட தென்னிந்திய (தெலுங்கு) திரைப்பட நடிகராவார். 2006 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்படும் இரண்டாம் நிலை விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றார். 7 முறை பில்ம் பெயார் சிறந்த நடிகர் விருதைப் பெற்ற ஒரே தெலுங்கு நடிகர் இவராவார். இவர் 2008 ஆகஸ்ட் 10 ஆம் நாள் அரசியல் கட்சி அலுவலகத்தை தொடங்கியுள்ளார். 2008 ஆகஸ்ட் 17 இக்கட்சியின் பெயர் பிரஜா ராஜ்யம் கட்சி என்று அறிவித்துள்ளார். [2] 2009ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பலேகொல், திருப்பதி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டதில் திருப்பதியில் மட்டும் வெற்றி பெற்றார் [3]. ஆகத்து 20,2011 அன்று இராஜிவ் காந்தி பிறந்தநாளில் புதி டில்லியில் இராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசு கட்சியில் இணைந்தார். [4]