விஜயகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விஜயகுமார் தென்னிந்திய திரைப்பட நடிகர்களில் ஒருவர். பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் பெருமளவு இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்த இவர் தற்பொழுது தந்தை வேடங்களில் நடித்து வருகிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்துள்ளார், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்[1].

இவர் பட்டுக்கோட்டை அருகிலுள்ள நாட்டுச்சாலை என்ற சிற்றூரில் 1949ம் ஆண்டு பிறந்தவர். இவரின் முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு, திரைப்பட நடிகை மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அருண் விஜய் ஆவார், இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, சிறீதேவி என்ற பெண்கள் உள்ளனர்.

சின்னத்திரையிலும் நடிக்கத்தொடங்கியுள்ள இவர் 'தங்கம்' தொடரில் ரம்யா கிருஷ்ணன் உடைய தந்தையாக நடித்துள்ளார்.

இவர் தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.

இவர் நடித்துள்ள திரைப்படங்கள்[தொகு]மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.hindu.com/2005/12/08/stories/2005120815220200.htm
"http://ta.wikipedia.org/w/index.php?title=விஜயகுமார்&oldid=1705623" இருந்து மீள்விக்கப்பட்டது