ஏ. ஆர். முருகதாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஏ. ஆர். முருகதாஸ் ஒரு தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்.

முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் பிறந்து திருச்சி பிசப் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் தனது கல்லூரிப் பருவத்தில் தமிழ் சினிமா துறையில் ஆர்வமாக இருந்துள்ளார். கல்லூரிப் பருவத்தில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நடிப்பது, பிரபலமான நடிகர்களைப் போல் குரல் மாற்றிப் பேசுவது போன்ற விசயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார். பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். எஸ். ஜே. சூர்யாவிடம் வாலி, குஷி போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரது ரமணா திரைப்படம், நடிகர் விஜயகாந்தின் முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா திரைப்படம், தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் சிரஞ்சீவி நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது.

இயக்கியுள்ள திரைப்படங்கள்[தொகு]

தயாரித்த திரைப்படங்கள்[தொகு]

வெளியிணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஆர்._முருகதாஸ்&oldid=1744085" இருந்து மீள்விக்கப்பட்டது