2014
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 20ம் நூ - 21ம் நூ - 22ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1980கள் 1990கள் 2000கள் - 2010கள் - 2020கள் 2030கள் 2040கள் |
| ஆண்டுகள்: | 2011 2012 2013 - 2014 - 2015 2016 2017 |
| 2014 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 2014 MMXIV |
| திருவள்ளுவர் ஆண்டு | 2045 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2767 |
| சீன நாட்காட்டி | 4710-4711 |
| எபிரேய நாட்காட்டி | 5773-5774 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2069-2070 1936-1937 5115-5116 |
| இரானிய நாட்காட்டி | 1392-1393 |
| இசுலாமிய நாட்காட்டி | 1435 – 1436 |
| ரூனிக் நாட்காட்டி | 2264
|
2014 ஆம் ஆண்டு (MMXIV) கிரிகோரியன் நாட்காட்டியின் படி புதன் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு சாதாரண ஆண்டாக இருக்கும். இது கி.பி. 2014ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 14ஆம் ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 14ஆம் ஆண்டாகவும் இருக்கும். மேலும் 2010களின் ஐந்தாம் ஆண்டாகவும் இருக்கும்.
எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள் [தொகு]
- சனவரி 20 - வால்வெள்ளியில் இறங்குவதற்காக 2004 இல் அனுப்பப்பட்ட ரொசெட்டா விண்கலம் உறக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளும்.
- பிப்ரவரி 7 – பிப்ரவரி 23 – உருசியாவிலுள்ள சொச்சியில் 2014ஆம் ஆண்டிற்கான க் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.
- மார்ச்சு 7 – மார்ச்சு 16 – உருசியாவிலுள்ள சொச்சியில் 2014ஆம் ஆண்டிற்கான க் குளிர்கால பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.
- மார்ச்சு 22 – ஹோல்ம்சு என்ற வால்விண்மீனின் அடுத்த ஞாயிற்றண்மை நிலை தொடங்குகிறது.
- ஏப்ரல் 29 – வளையக் கதிரவ ஒளிமறைப்பு
- சூன் – ஜேம்சு வெப் விண்வெளித் தொலைநோக்கி ஏவப்படும்
- சூன் 13 – சூலை 13 – கால்பந்தாட்ட உலகக் கோப்பைப் போட்டிகள் பிரேசிலில் நடைபெறும்.
- ஆகத்து 24 – புளூட்டோவை நோக்கிய தனது 8½ ஆண்டுகாலப் பயணத் திட்டத்தில் நாசாவின் நியூ ஒரைசான் விண்கலம் நெப்டியூன் கோளைத் தாண்டி இருக்கும். இது வாயேஜர் 2 விண்கலத்தை விட வேகமானது. வாயேஜர் 2 ஆனது 12 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.
- நவம்பர் - ரொசெட்டா விண்கலம் 10 ஆண்டுகள் பயணத்தின் பின்னர் 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ வால்வெள்ளியில் இறங்கும்.
நாள் தெரியாதவை [தொகு]
- உலக வர்த்தக மையக் கட்டடம் ஆனது 2014இல் முடிக்கப்பட்டு விடும் என்று கருதப் படுகிறது.
- மஸ்டார் என்ற நகரமானது முழுவதுமாகக் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நகரமே உலகின் முதல் வளங்குன்றாத் தொழில்நுட்பம் கொண்டதும் கரிப் பயன்பாடு இல்லாததும் கழிவு வெளியேற்றம் இல்லாததும் ஆகும்.