கோடம்பாக்கம்
| கோடம்பாக்கம் Tamil Nadu |
|
| — neighbourhood — | |
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சென்னை மாவட்டம் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| சட்டமன்றத் தொகுதி | தி. நகர் |
| திட்டமிடல் முகமை | CMDA |
| Civic agency | சென்னை மாநகராட்சி |
| Ward | வார்ட் நம்பர் 130 (கோடம்பாக்கம் மேற்கு) & வார்டு நம்பர் 131 (கோடம்பாக்கம் தெற்கு) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| இணையதளம் | சென்னை மாவட்ட இணையத்தளம் |
கோடம்பாக்கம் சென்னையின் முன்னேறிய பகுதிகளில் ஒன்றாகும். கோடம்பாக்கம் என்றாலே தமிழ்த் திறையுலகைத் தான் குறிப்பிடுவர். தமிழ் திறையுலகின் பெயரான கோலிவுட் கோடம்பாக்கத்திலிருந்து வந்ததாகும்[ஆதாரம் தேவை]. தமிழ்த் திரையுலகின் பல பிரபலங்கள் இங்கு வசிக்கின்றனர். ஏ.வி.எம் போன்ற பல திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் கோடம்பாக்கத்தின் அருகில் அமைந்துள்ளன.
[தொகு] அமைவிடம்
தியாகராய நகர், வடபழநி, நுங்கம்பாக்கம், சூலைமேடு, அஷோக் நகர் மற்றும் மேற்கு மாம்பலம் ஆகிய சென்னையின் பிறப் பகுதிகளுடன் கோடம்பாக்கத்தின் எல்லைகளாக உள்ளன. சென்னைக் கடற்கறையிலிருந்து தாம்பரம் வரைச் செல்லும் புறநகர் ரயில் பாதை கோடம்பாக்கம் வழியாகச் செல்கின்றது. கோடம்பாக்கம் புறநகர் ரயில்நிலையம் இப்பாதையில் அமைந்துள்ளது.
கோடம்பாக்கம் வழியே செல்லும் ஆற்காடு சாலை (எந்.எஸ்.கே சாலை) வர்த்தக/வணிக நிறுவணங்கள், கடைகள் மற்றும் உணவு விடுதிகள் நிறைந்த பகுதியாகும். யுனைட்டட் இந்தியா காலனி, ரங்கராஜபுரம், ட்ரஸ்ட்புரம் மற்றும் டெய்லர்ஸ் எஸ்டேட் ஆகிய பகுதிகள் கோடம்பாக்கத்தின் குடியிருப்பு பகுதிகளாகும்.
[தொகு] நிறுவனங்கள்
லிபர்டி திரையரங்கம், சேகர் எம்போரியம், மேனகா அழைப்பிதழ்கள், மீணாக்ஷி கல்லூரி, மீணாக்ஷி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி, இலையோலா மெட்ரிக்குலேஷன் மேல்னிலைப்பள்ளி மற்றும் ஃபாட்டிமா மெட்ரிக்குலேஷன் மேல்னிலைப்பள்ளி ஆகியவை கோடம்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களாகும். ஆங்கிலச் செய்திப் பத்திரிக்கையான 'மீடியா வாய்ஸ்' கோடம்பாக்கத்திலிருந்துத்தான் வெளியாகிறது.