திருமழிசை
| திருமழிசை | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 16 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
திருமழிசை (ஆங்கிலம்:Thirumazhisai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,286 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருமழிசை மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருமழிசை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
சிறப்பு [தொகு]
இந்த தலத்தின் தனிச்சிறப்பு, திருமழிசை ஆழ்வார் அவதரித்த தலமாகும். இவர் 12 ஆழ்வார்களில் ஒருவராவார். திருமழிசை ஆழ்வாருக்கென்று தனி ஆலயம் இந்த ஊரில் உள்ளது. இந்தக் கோயில் ஜெகன்னாதப் பெருமாள் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.[4]இதற்கு அருகிலேயே வீற்றிருந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாள் அமர்ந்த கோலத்தில் அஷ்டலட்சுமிகளுடன் காட்சி அளிக்கிறார். ஒத்தாண்டேசுவரர் கோயில் இங்கு அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[5]
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
- ↑ http://temple.dinamalar.com/New.php?id=142
- ↑ http://temple.dinamalar.com/New.php?id=141
|
||||||||||||||||||||||||||