தண்டையார்பேட்டை
தண்டையார்பேட்டை (Tondiarpet) இந்திய மாநகரம் சென்னையின் வடக்கில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதியாகும். கடற்கரையின் ஒரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதி முதன்மையான வணிக மையமாகத் திகழ்கிறது. தொழிற்சாலைகளும் முகமை நிறுவனங்களும் நிறைந்து காணப்படுகின்றன. பட்டு மற்றும் நகை ஏற்றுமதி நிறுவனங்களும் கூடுதலாக உள்ளன. சென்னையின் அனைத்துப் பகுதிகளுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.இங்கு வங்கிகளின் கிளைகளும் சிறப்பான பள்ளிகளும் உள்ளன.மீன்பிடி துறைமுகமும் மீன்வள அலுவலகமும் இங்கு அமைந்துள்ளன.
பெயர்க்காரணம் [தொகு]
இந்த பகுதி ஒரு பிரபலமான பதினேழாம் நூற்றாண்டில் முஸ்லீம் துறவி "குணங்குடி மஸ்தான் சாஹிப்" என்பவரால் பெயர் பெறுகிறது குணங்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி அருகில் அமைந்துள்ள அவரது பிறந்த இடம் ஆகும் . அவர் சென்னை "லெப்பை காடு" என்ற இடத்தில் தவம் செய்தார். உள்ளூர் வாசிகள் "தொண்டி ஆவர் நாயகன்" என்ற பொருள் பட, அவரை "தொண்டியார்" அழைத்தனர் . பின்னர், லெப்பை காடு தொண்டியார்பேட்டை எனப்பட்டது . தொண்டியார்பேட்டை அருகில் ராயபுரம் அமைந்துள்ளது. ஹசரத் குணங்குடி மஸ்தான் சாஹிப் தர்காவில் எல்லா நம்பிக்கை கொண்ட அனைத்து மக்களும் விஜயம் செய்கின்றனர்.